பிரதரும், பிளடி பெக்கரும் காலி...! 3 நாள்களில் லக்கி பாஸ்கர் வசூல் எத்தனை கோடி தெரியுமா?

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:29:39  )

இந்த வருடம் தீபாவளிக்கு அமரன், பிளடி பெக்கர், பிரதர், லக்கி பாஸ்கர் ஆகிய 4 படங்கள் ரிலீஸ் ஆனது. இதில் அமரன் படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்து வசூல் சாதனை புரிந்துள்ளது.

அடுத்ததாக பிளடி பெக்கரையும், பிரதரையும் ரொம்பவே எதிர்பார்த்தனர். ஆனால் சத்தமே காட்டால் வந்த லக்கி பாஸ்கர் படம் ஹிட் அடித்துள்ளது. வசூலிலும் சாதனை படைத்து பிளடி பெக்கரையும், பிரதரையும் பின்னுக்குத் தள்ளி விட்டுள்ளது.

ஜெயம் ரவி நடித்த பிரதர் படம் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியானது. ராஜேஷ் இயக்கிய இந்தப் படம் நகைச்சுவை கலந்த குடும்பப்படமாக உருவானது. அதே போல இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் உருவான பிளடி பெக்கர் படமும் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டது.

10 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் உலகம் முழுவதும் 3 நாள்களில் 10 கோடி வசூல் என்று சொல்லப்படுகிறது. இந்தப் படத்தில் கவினின் நடிப்பு பிரமாதமாக இருந்தது.

அதே போல பிரதர் படம் இந்திய அளவில் 3 நாள்களாக மொத்தம் 7.60 கோடி தான் வசூலித்துள்ளது. அதே நேரம் லக்கி பாஸ்கர் படம் வெளியான 3 நாள்களில் உலகளவில் 39.9 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

வெங்கி அட்லுரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் படமும் தீபாவளி அன்று தான் வெளியானது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். மீனாட்சி சௌத்ரி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படம் இப்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல பிக்கப் ஆகி வருகிறது.

வங்கியில் கேஷியராக உள்ள கதாநாயகன் வீட்டில் கடன் தொல்லை. நேர்மையாக வேலை செய்தால் இனி வேலைக்கு ஆகாதுன்னு சில முடிவுகள் எடுக்கிறார். அதனால் வரும் பிரச்சனைகள் தான் கதை. வங்கியில் நடக்கும் ஊழல்கள், பங்குச்சந்தை மோசடிகளைத் தோலுரித்துக் காட்டியுள்ளார் இயக்குனர் வெங்கி அட்லூரி.

சிக்கலான கதை தான் என்ற போதிலும் கொஞ்சம் தெளிவாக சொன்னதால படம் மக்கள் மத்தியில் போய்ச்சேர்ந்துள்ளது. மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் மாஸான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்துள்ள படம் இது என்றாலும் ரசிகர்கள் ரசிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.

Next Story