விடாமுயற்சி ரிலீசுக்கு தடை போட்டது லைகாவா? கடும் கோபத்தில் அஜித்
Vidamuyarchi: அஜித் நடிப்பில் அடுத்து உருவாகி ரிலீசுக்கு தயாராகி இருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளி போனதற்கு பின்னால் தயாரிப்பு நிறுவனமான லைக்காதான் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் துணிவு திரைப்படத்திற்கு பின்னர் ஒப்பந்தமான திரைப்படம் விடாமுயற்சி. பல கட்ட தாமதத்திற்கு பின்னர் 2023ம் வருடம் கடைசியில் இப்படத்தின் சூட்டிங் தொடங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து
அஜர்பைஜானின் கால சூழ்நிலையால் படத்தின் ஷூட்டிங் பலமுறை ரத்தானது. இதையடுத்து, படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் முடிக்கப்பட்டது. இப்படத்தின் சவாதீகா என்ற முதல் சிங்கிளும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதைத்தொடர்ந்து படம் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் என தகவல்கள் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் பட குழு தரப்பில் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் அதுவரை வெளியாகவில்லை. சென்சாருக்கு கூட படம் செல்லாமல் இருந்தது மேலும் பிரச்சனையை அதிகரித்தது.
இதைத்தொடர்ந்து ஜனவரி 1ஆம் தேதி லைக்கா நிறுவனம் சார்பில் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் ஆகி தள்ளி வைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இது அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் இந்த ரிலீஸ் தள்ளி போனதற்கு பின்னால் தயாரிப்பு நிறுவனமான லைக்கா தான் இருக்கிறதாம்.
படக்குழு மொத்தமும் படத்தை முடித்து கொடுக்க பொங்கல் ரிலீசில் அவர்கள் உறுதியாக இருந்திருக்கின்றனர். அடுத்ததாக அஜித் ரேசிங் களத்திற்கு செல்ல இருப்பதால் தன்னுடைய குடும்பத்துடன் நாட்களை செலவிட அவரும் சுற்றுலாவுக்கு கிளம்பி விட்டார். இந்த நிலையில் தான் லைக்கா நிறுவனம் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
இதற்கு முக்கிய காரணம், தியேட்டர் தரப்பில் இருந்து ஏற்கனவே லைக்கா நிறுவனம் வெளியிட்ட லால் சலாம் மற்றும் இந்தியன் 2 திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் தோல்வியை தழுவியது. இதனால் திரையரங்குகளுக்கு பெரிய நஷ்டம். அதனால், விடாமுயற்சி திரைப்படத்திற்கு 60% ஷேர் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து படம் நன்றாக ஓடினால் மற்ற விஷயங்களை பேசிக்கொள்ளலாம் எனவும் அவர்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் படத்தை வெளியிட்டால் வசூல் என படத்திற்கு எதுவும் கிடைக்காது என்பது லைக்காவின் எண்ணமாக இருந்ததாம்.
இன்னொரு புறம், விடாமுயற்சி ரீமேக் செய்யப்பட்ட பிரேக் டவுன் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் பாராமவுண்ட் பிக்சருக்கு 85 கோடி லைக்கா நிறுவனம் கொடுக்கப்பட வேண்டும். அதற்கு பதிலாக படம் வெளியீட்டில் பார்ட்னர்ஷிப் போட்டுக் கொள்ளலாம் என கோரிக்கை வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
படம் எல்லா வேலைகளும் முடிந்து விட்ட நிலையில் ஜனவரி குடியரசு தின விடுமுறையிலோ, பிப்ரவரி முதல் வாரத்திலோ வெளியிடப்படலாம் என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
பல மாத போராட்டத்திற்கு பின்னர் படத்தை முடித்துக் கொடுத்த நடிகர் அஜித் தற்போது இந்த முடிவால் கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சனையால் குட் பேட் அக்லியை விடாமுயற்சிக்கு முன்னால் வெளியிடவும் வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.