Categories: Cinema News latest news

Maargan: 1 மில்லியனை கடந்த ட்ரைலர்… கொண்டாட்டத்தில் மார்கன் படக்குழுவினர்

விஜய் ஆண்டனியின் வித்தியாச நடிப்பில் உருவாகி இருக்கும் மார்கன் படத்தின் டிரெய்லர் சாதனை படைத்துள்ளது.

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுக ஆனவ்ர் விஜய் ஆண்டனி. குறுகிய காலத்தில் விஜய், விஜயகாந்த் என முன்னணி நடிகர்கள் படங்களுக்கு இசையமைத்தார். இவரது பாடல்களும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

maargan vijay

வழக்கம்போல இவருக்கும் ஹீரோவாகும் ஆசை ஏற்பட தொடர்ந்து தற்போது நாயகனாக நடித்து வருகிறார். பிச்சைக்காரன், நான் உள்ளிட்ட சில படங்கள் நல்ல வரவேற்பையும் பெற்றன.

இந்த நிலையில் விஜய் ஆண்டனி நடிப்பில் லியோ ஜான் பவுல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மார்கன் படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. க்ரைம் திரில்லராக உருவாகியிருக்கும் இப்பத்தின் டிரைலர் நறாகவே இருந்தது. நேற்று வெளியான் இந்த டிரைலர் குறுகிய கால இடைவெளியிலேயே 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது. இது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மார்கன் படம் வருகிற ஜூன் 27ம் தேதி வெளியாக உள்ளது.

Published by
ராம் சுதன்