எப்பவோ எடுத்த மதகஜ ராஜா ஹிட்டு!. இப்ப எடுத்த கேம் சேஞ்சர் பிளாப்!. ஷங்கரின் பரிதாபங்கள்!…

Published on: March 18, 2025
---Advertisement---

Game Changer: திரைப்படத்தின் வெற்றியை கணிக்கவே முடியாது. இந்த படமெல்லாம் ஓடாது என சொன்ன படங்கள் பாக்ஸ் ஆபிசில் வசூலை அள்ளியிருக்கிறது. இந்த படம் சூப்பர் ஹிட் அடிக்கும் என சொன்ன திரைப்படம் தோல்வி அடைந்திருக்கிறது. ஒரு படத்தில் எல்லாம் சரியாக அமைந்து ரசிகனை திருப்திப்படுத்தி அவனுக்கு பிடித்தால் மட்டுமே படம் வெற்றி பெறும்.

அது ஒரு மேஜிக் போல நிகழும். சில இயக்குனர்கள் மட்டுமே அப்படி சொல்லி அடிப்பார்கள். சில படங்களை இயக்குனரும், தயாரிப்பாளரும் புகழந்து தள்ளுவார்கள். பயங்கரமாக புரமோஷனும் செய்வார்கள். ஆனால், முதல் காட்சியிலேயே அந்த படத்தை ரசிகர்கள் கழுவி ஊற்றுவார்கள். சூர்யாவின் கங்குவா படத்திற்கு இதுதான் நடந்தது. இதற்கு முன் அஞ்சான் படத்திலும் சூர்யாவுக்கு இது நடந்தது.

பாபா நஷ்டம்: ரஜினி நடித்தாலே ஹிட்டு.. அவரால் வினியோகஸ்தர்கள் நஷ்டமே அடைந்தது இல்லை என சொல்லுவார்கள். ஆனால், அவர் நடிப்பில் வெளிவந்த பாபா படம் வினியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தையே கொடுத்தது. இதனால், அவர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ரஜினி திருப்பி கொடுக்கும் நிலை ஏற்பட்டது. அதேபோல், ரஜினியின் குசேலன், தர்பார், அண்ணாத்த, லால் சலாம், வேட்டையன் போன்ற படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை.

இயக்குனர் ஷங்கர்: இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இயக்குனராக பார்க்கப்பட்டவர் ஷங்கர். அவருக்கு இப்போது இறங்கு முகம் போல. கடந்த சில வருடங்களாகவே அவரின் படங்கள் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுப்பதில்லை. 2.0 படம் வசூலை பெற்ற நிலையில் அடுத்து அவர் இயக்கிய படமான இந்தியன் 2 தோல்விப்படமாக அமைந்தது.

கேம் சேஞ்சர்: அடுத்து தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 10ம் தேதி வெளியான திரைப்படம்தான் கேம் சேஞ்சர். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்தியன் 2-வை ஒப்பிட்டால் இந்த படம் ஓகே என பலரும் சொல்லுமளவுக்குதான் கேம் சேஞ்சர் இருந்தது.

மத கஜ ராஜா: படம் வெளியாகி 3 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இப்படம் இன்னமும் 100 கோடியை கூட வசூல் செய்யவில்லை என சொல்லப்படுகிறது. அதேநேரம், 12 வருடங்களுக்கு முன்பு சுந்தர் சி இயக்கி ரிலீஸ் ஆகாமல் இருந்த மத கஜ ராஜா படம் கடந்த 12ம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது. படம் முழுக்க காமெடி காட்சிகள் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. இந்த வார இறுதி வரை விடுமுறை இருப்பதாலும், பொங்கலுக்கு குடும்பத்துடன் ஜாலியாக சென்று பார்க்கும் படம் என்பதாலும் தமிழகத்தில் கேம் சேஞ்சரை விட மத கஜ ராஜா படம் அதிக வசூலை பெறும் என்றே கணிக்கப்படுகிறது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment