Madharasi: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் திரைப்படம் மதராஸி. அமரன் பட ஹிட்டுக்கு பின் சிவகார்த்திகேயனின் மார்கெட் மேலே போய்விட்டது. அமரன் படம் 300 கோடி வசூலை பெற்றது. தமிழகத்தில் மட்டும் 70 கோடி ஷேர் கொடுத்தது. எனவே, அதையே தனது சம்பளமாக ஏற்றிவிட்டார் எஸ்.கே.
அதோடு, அமரன் ஹிட்டுக்கு பின் பெரிய இயக்குனர்கள், நிறுவனங்கள் என ஸ்கெட்ச் போட்டு படங்களை தேர்ந்தெடுக்க துவங்கிவிட்டார். சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த திரைப்படம் புறநானூறு. ஆனால், சூர்யா நடிக்க மறுக்கவே அதில் சிவகார்த்திகேயன் நடிக்க முன்வந்தார்.
பராசக்தி என்கிற பெயரில் துவங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இது 1960 காலகட்டத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போரட்டம் பற்றிய கதையாகும். இந்த படத்தில் ரவி மோகன், அதர்வா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். ஒருபக்கம், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் மதராஸி படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.
தர்பார் படத்திற்கு பின் 4 வருடங்கள் முருகதாஸ் எந்த படத்தையும் இயக்காமல் இருந்தார். இடையில் விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு வந்து சம்பள பிரச்சனை காரணமாக அப்படத்திலிருந்து வெளியேறினார். அதன்பின் இப்போது மதராஸி படத்தை இயக்கி வருகிறார். மதராஸி படத்தை இயக்கியபோது இந்தியில் சல்மான்கானை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு வர அங்கே போனார். அப்படி உருவான சிக்கந்தர் படம் பாக்ஸ் ஆபிசில் மண்ணை கவ்வியது.
இந்நிலையில், மதராஸி திரைப்படம் 200 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிலிக்ஸ் நிறுவனம் 23 கோடிக்கு வாங்கியிருக்கிறது. அக்டோபர் 3ம் தேதி மதராஸி படம் ஓடிடியில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
தொடர்ந்து பெரிய இயக்குனர்கள், அதிக பட்ஜெட் என பயணிக்க துவங்கிவிட்டார் சிவகார்த்திகேயன். மதராஸி, பராசக்தி ஆகிய படங்களை முடித்தபின் குட்நைட் பட இயக்குனரின் படத்தில் நடிக்கவிருக்கிறார். அடுத்து டான் சிபி சக்ரவர்த்தி, வெங்கட்பிரபு என கை வசனம் படங்களை வைத்திருக்கிறார்.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…