Connect with us

ரூ 21 கோடியை வட்டியுடன் லைக்காவிடம் கொடுக்க வேண்டும்: விஷாலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

latest news

ரூ 21 கோடியை வட்டியுடன் லைக்காவிடம் கொடுக்க வேண்டும்: விஷாலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். பல வெற்றிப் படங்களை கொடுத்த அவர் விஷால் பிலிம் பேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கில் அதிலும் படங்களை தயாரித்து நடித்து வந்தார். இதில் ஒரு கட்டத்தில் கடன் அதிகரிக்கவே சொந்த படங்களை தயாரிப்பதை நிறுத்தினார்.

இந்த நிலையில் தனது சொந்த நிறுவனத்தில் படம் தயாரிக்க மதுரையைச் சேர்ந்த அன்புசெழியனினின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தில் வாங்கிய கடன் தொகை ரூ.21 கோடியே 29 லட்சம் ரூபாயை லைக்கா நிறுவனம் ஏற்றுக் கொண்டு கடனை அடைத்தது.

விஷாலும், லைகா நிறுவனமும் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, கடன் தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்குவதாக உத்தரவாதம் வழங்கப்பட்டது. ஆனாலும் பணத்தினை விஷால் செலுத்தாததால் வழக்கினை தொடந்தது லைக்கா நிறுவனம்.

இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று, விஷால் வங்கிய கடன் ரூ.21 கோடியே 29 லட்சம் ரூபாயை வட்டி 30% சேர்த்து லைக்கவிற்கு செலுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top