விடாமுயற்சி காதல் படமா!.. ஆக்ஷன் படம் இல்லையா?.. மகிழ் திருமேனி சொல்றத கேளுங்க!..

அஜித் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் விடாமுயற்சி. துணிவு திரைப்படத்திற்கு பிறகு கடந்த இரண்டு வருடங்களாக நடிகர் அஜித்தின் எந்த திரைப்படங்களும் திரையரங்குகளில் வெளியாகவில்லை. மகிழ் திருமேனி இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் 2 வருடமாக விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வந்தது. கடந்த டிசம்பர் மாதம் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்தது.
ஜனவரி மாதம் அதாவது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. கடைசி நேரத்தில் படம் பொங்கலுக்கு வெளியாகாது என்கின்ற அறிவிப்பை லைக்கா நிறுவனம் வெளியிட்டது. அதனை தொடர்ந்து பிரச்சனைகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது பிப்ரவரி 6-ம் தேதி விடாமுயற்சி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது.
இந்த திரைப்படம் இவ்வளவு தாமதமாக வெளியாவது ரசிகர்களுக்கு சற்று கோபத்தை ஏற்படுத்தி இருந்தாலும் படத்திலிருந்து வெளியான டீசர், பாடல், டிரைலர் அனைத்தும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்றது. இதனால் இப்படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு உருவாகி இருக்கின்றது. பண்டிகை தினங்களில் வெளியாகவில்லை என்றால் என்ன விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் தினம் தான் உண்மையான பண்டிகை நாள் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
படம் வெளியாவதற்கு இன்னும் சில நாட்களை இருப்பதால் தொடர்ந்து படக்குழுவினர் புரமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி பல்வேறு youtube சேனல்களுக்கு பிரத்தியேக பேட்டியை கொடுத்து வருகின்றார். இவரின் பேட்டியை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். படம் குறித்து இவர் பேசும் விதம் மற்றும் அஜித் குறித்து இவர் சொல்லும் பல விஷயங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகின்றது.
அந்த வகையில் சமீப நாட்களாக மகிழ் திருமேனி இந்த திரைப்படம் பெண்களுக்கான ஒரு திரைப்படமாக இருக்கும். இப்படத்தில் பஞ்சு வசனங்கள் இல்லை, மாஸ் காட்சிகள் இல்லை, மிகப்பெரிய என்ட்ரி, இன்டர்வல் பிளாக் என எதுவும் இல்லை. ஆனால் படம் நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக இருக்கும். அஜித்தை இதுவரை ரசிகர்கள் இப்படி பார்த்திருக்கவே மாட்டார்கள். ஒரு ஆக்ஷன் கலந்த திரில்லர் திரைப்படமாக இப்படம் இருக்கும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தனியார் youtube சேனலில் நீயா நானா கோபி எடுத்த பேட்டியில் இந்த திரைப்படம் ஒரு காதல் படமாக இருக்கும் என்று கூறியிருக்கின்றார். அந்த பேட்டியில் அஜித் மற்றும் திரிஷா ஜோடி என்றால் பலருக்கும் மிகவும் பிடிக்கும். அந்த வகையில் இந்த திரைப்படத்தில் இவர்களின் காட்சிகள் எப்படி வந்திருக்கின்றது என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த மகிழ் திருமேனி 'அவர்கள் இருவரும் வயதே இல்லாத ஜோடிகள். இவர்கள் 20 வயதில் நடிக்க தொடங்கி இருக்கலாம்.
30 வயதில் ஜோடி சேர்ந்திருக்கலாம், 40 வயதில் ஜோடி சேர்ந்திருக்கலாம். தற்போது என்ன வயதாக வேணாலும் இருக்கலாம். ஆனால் தற்போதும் அவர்களின் ஜோடியை பார்ப்பதற்கு புதுசாக இருக்கின்றது. முதல் படத்தில் பார்ப்பது போலயே இந்த படத்திலும் ஒரு காதல் டிராக் அவ்வளவு அருமையாக வந்திருக்கின்றது. என்னுடைய பார்வையை பொறுத்தவரையில் இந்தப் படம் என்னுடைய மூலக்கதை இல்லை. ஆனால் இந்த படத்தை நான் என்னுடைய பார்வையில் எப்படி பார்க்கிறேன் என்றால் ஒரு காதல் கதையாக தான் பார்க்கின்றேன்.
இதில் ஒரு சிறப்பான காதல் இருக்கின்றது. ஜனவரி மாதம் இல்லாமல் பிப்ரவரி மாதம் வெளியாவதில் எனக்கு ஒரு ஸ்பெஷல் தான். மன்னித்து ஏற்றுக் கொள்கின்ற ஒரு காதல், குற்றம் குறைகளோடு அரவணைத்து செல்கின்ற ஒரு காதல் இந்த படத்தில் உண்டு. இதை அனைவரும் விரும்புவார்கள் என்று நினைக்கின்றேன். அதிலும் பெண்களுக்கு பிடித்த படமாக இருக்கும் என்று நம்புகிறேன்' என்று அழகாக இந்த படத்தில் இருக்கும் காதலை விவரித்து இருக்கின்றார் மகிழ்திருமேனி.