அஜித்த நம்பி சியான் விக்ரமை விட்ட மகிழ் திருமேனி!. இவர் நிலைமை இப்படி ஆகிப்போச்சே!...
தடையறத்தாக்க , மீகாமன், தடம் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்கமுடியாத இயக்குனராக மாறினார் மகிழ்திருமேனி. செல்வராகவன் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக இருந்தவர்தான் மகிழ்திருமேனி.சிறுகதை, கவிதை இவற்றை எழுதுவதிலும் அதிக ஆர்வம் கொண்டவர். இவர் பேச்சிலும் அந்த கவிதை நயம் தெரியும்.
துள்ளுவதோ இளமை படத்தில்தான் முதன் முதலில் உதவி இயக்குனராக சேர்ந்தார். அதன் பின்னர் காக்க காக்க, பச்சைக்கிளி முத்துச்சரம், வேட்டையாடு விளையாடு போன்ற படங்களிலும் பணிபுரிந்திருக்கிறார் மகிழ்திருமேனி.கடைசியாக கழகத்தலைவன் படத்தை இயக்கினார். அந்தப் படத்தை நீண்ட நாள்களாக எடுத்துக் கொண்டே இருந்தார் என அந்தப் படத்தின் விழா மேடையில் உதய நிதி ஸ்டாலின் மகிழ்திருமேனியை கிண்டல் செய்தார்.
ஆனால் அதற்கும் தக்க பதிலடி கொடுத்தார் மகிழ்திருமேனி. இந்த நிலையில் தான் அஜித் நடிப்பில் விடாமுயற்சி படத்தை இயக்கும் வாய்ப்பு மகிழ்திருமேனிக்கு வந்தது. முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்து பின் மகிழ்திருமேனி உள்ளே வந்தார். மகிழ்திருமேனி அஜித் காம்போ எனும் போது பெரிய ஹைப் படத்திற்கு இருந்தது. படம் கண்டிப்பாக வேறு மாதிரி இருக்கப் போகிறது என அனைவரும் எதிர்பார்த்தனர்.
அந்தளவுக்கு உசுப்பேத்தினர். இதனால் கூட விக்ரம் அடுத்ததாக மகிழ்திருமேனியுடன் இணைந்து ஒரு படம் பண்ண விரும்பினார். ஆனால் மகிழ்திருமேனியோ விக்ரமுக்கு சரியான ரெஸ்பான்ஸ் கொடுக்கவில்லையாம். இதில் விக்ரமுக்கும் கொஞ்சம் அப்செட் ஆனதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் விடாமுயற்சி படத்தின் ரிசல்ட் என்ன என்பது அனைவருக்குமே தெரியும்.
அதற்கேற்ப மகிழ்திருமேனிக்கும் அடுத்து பட வாய்ப்புகள் இல்லையாம். அதனால் மகிழ்திருமேனியே விக்ரமை அணுகினாராம். ஆனால் இந்த முறை விக்ரம் ரெஸ்பான்ஸ் செய்யவில்லை என்று சொல்லப்படுகிறது. ஒரு வேளை அடுத்த இயக்குனரை ஒப்பந்தம் செய்துவிட்டாரா அல்லது மகிழ் திருமேனி செய்ததை மனதில் வைத்து விக்ரம் இப்படி செய்தாரா என தெரியவில்லை.