மீண்டும் அஜித்துடன் ஒரு படம்!. அது செம மாஸா இருக்கும்!.. ஹைப் ஏத்தும் மகிழ் திருமேனி!...

by சிவா |
மீண்டும் அஜித்துடன் ஒரு படம்!. அது செம மாஸா இருக்கும்!.. ஹைப் ஏத்தும் மகிழ் திருமேனி!...
X

Vidaamuyarchi: அஜித் நடிப்பில் விடாமுயற்சி படம் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி விட்டது. வருகிற பிப்ரவரி 6ம் தேதி இப்படம் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. அஜித்தின் படம் வெளியாகி 2 வருடங்கள் ஆகிவிட்டதால் அவரின் ரசிகர்களும் இப்படத்தை காண ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.

விடாமுயற்சி: லைக்கா தயாரிப்பில் கடந்த வருட,ம் ஜனவரி மாதம் இப்படம் துவங்கப்பட்டு அசர்பைசான் நாட்டில் பல மாதங்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்திருக்கிறது. இந்த படம் உருவான போது பல காரணங்களால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. அதில் முக்கிய காரணம் லைக்கா நிறுவனம் சந்தித்த நிதி நெருக்கடி பிரச்சனை.

லைக்காவுக்கு ஏற்பட்ட நஷ்டம்: லால் சலாம், இந்தியன் 2, வேட்டையன் போன்ற படங்களில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக விடாமுயற்சிக்கு பணம் கொடுக்க முடியவில்லை. ஒருகட்டத்தில் அஜித் குட் பேட் அக்லி என்கிற படத்தை கமிட் செய்து அதில் நடிக்க துவங்கிவிட்டார். ஒருபக்கம், மகிழ் திருமேனியும் வேகமாக படமெடுக்கும் இயக்குனர் இல்லை. எடுத்த காட்சிகளையே மீண்டும் மீண்டும் எடுப்பார் என்கிற விமர்சனமும் அவர் மீது இருக்கிறது.

தற்போது ஒருவழியாக படம் முடிந்துவிட்டது. பொதுவாக அஜித் படங்கள் என்றால் அவரின் அசத்தலான அறிமுக காட்சி, பன்ச் வசனம் போன்றவை அவரின் ரசிகர்களுக்காக வைக்கப்படும். விடாமுயற்சியிலும் அப்படி காட்சிகள் இருக்குமா என்கிற எதிர்பார்ப்பு அவரின் ரசிகர்களுக்கு இருக்கிறது.

பன்ச் வசனம்: இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய அப்படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி ‘ திறந்த மனதோடு இந்த படத்தை பார்க்க வாருங்கள். இது அருமையான திரைப்படம். இந்த படத்தில் அஜித் சார் பன்ச் வசனம் பேசமாட்டார். மாஸ் ஒப்பனிங் இருக்காது. பில்டப்போடு கூடிய இடைவேளை காட்சி இருக்காது. ஆனாலும் இப்படம் எல்லோரையும் திருப்திப்படுத்தும்.

‘உங்கள் ரசிகர்கள் சிலவற்றை எதிர்பார்ப்பார்கள். எனவே, சில காட்சிகளை மாஸாக வைக்கலாமா?’ என்று அஜித்திடம் கேட்டேன். ஆனால், அவர் அதை ஏற்கவில்லை. ‘இந்த மாஸ், ஹீரோயிசம் இது எல்லாவற்றையும் நம்முடைய அடுத்த படத்தில் வைத்துக் கொள்ளலாம் என சொல்லிவிட்டார்’ என என சொல்லியிருக்கிறார்.

அஜித் எந்த இயக்குனரின் படத்தில் நடித்தாலும் தொடர்ந்து 3 படங்கள் அவரின் இயக்கத்தில் நடிப்பார். சிறுத்தை சிவா, ஹெச்.வினோத் ஆகியோர் அப்படித்தான் தொடர்ந்து படங்களை இயக்கினர்கள். இப்போது இந்த லிஸ்ட்டில் மகிழ் திருமேனியும் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story