Magizh Thirumeni: செல்வராகவன் மற்றும் கவுதம் மேனனிடம் சினிமா கற்றவர் மகிழ் திருமேனி. இவர் இயக்கிய முதல் திரைப்படம் ‘முன்தினம் பார்த்தேனே’. 2010ம் வருடம் இப்படம் வெளியானது. அதன்பின் இரண்டு வருடங்கள் கழித்து ‘தடையற தாக்க’ படத்தை எடுத்தார். இந்த படம் மூலம்தான் இவர் ரசிகர்களிடம் பிரபலமானார்.

ஆக்சன் திரில்லர்: அருண் விஜய் நடிப்பில் உருவான இந்த படம் ஒரு பக்கா ஆக்‌ஷன் திரில்லராக வெளிவந்தது. மகிழ் திருமேனியின் எல்லா படங்களுமே ஆக்‌ஷன் திரில்லராகவே இருக்கிறது. அடுத்து ஆர்யாவை வைத்து ‘மிகாமன்’, அருண் விஜயை வைத்து ‘தடம்’, உதயநிதியை வைத்து ‘கலக தலைவன்’ போன்ற படங்களை இயக்கினார். இதில் தடம் திரைப்படம் அருண் விஜய்க்கு ஒரு வெற்றிப்படமாக அமைந்தது.

விடாமுயற்சி: அந்நிலையில்தான் விடாமுயற்சி கதைக்கு மகிழ் திருமேனியை டிக் அடித்தார் அஜித். இந்த படத்தின் வேலை கடந்த வருடம் ஜனவரியில் துவங்கி பல காரணங்களால் படப்பிடிப்பு தடைபட்டு ஒருவழியாக இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது. பட வேலைகள் முடிந்து வருகிற பிப்ரவரி 6ம் தேதி விடாமுயற்சி திரைப்படம் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த மகிழ் திருமேனி ‘விடாமுயற்சி படம் உருவான நேரத்தில் பல கட்டுக்கதைகளை சிலர் பேசினார்கள். படம் முடிந்து நான் பேட்ஜ் ஒர்க் பணிக்காக மீண்டும் அஜர்பைஜான் செல்கிறேன் என சொன்னார்கள். என் முதல் படத்திலேயே நான் பேட்ஜ் ஒர்க் செய்தது கிடையாது.

அடுத்து, காட்களை எடுத்து எடிட் செய்து பார்த்துவிட்டு திருப்தியில்லாமல் மீண்டும் அந்த காட்சிகளை எடுத்து வருகிறேன் என சொன்னார்கள். இதை நான் எப்போதும் செய்தது இல்லை. இதை மட்டும் நிரூபித்துவிட்டால் நான் சினிமாவிலிருந்தே போய்விடுகிறேன். இல்லையெனில் அவர்கள் பொய் சொல்வதை நிறுத்திக்கொண்டால் போதும் என எதிர்பார்க்கிறேன்.

அஜித்குமாருடனான நட்பு: அதேபோல், எனக்கும் அஜித்துக்கும் இடையே சண்டை, மனக்கசப்பு என்று சொன்னார்கள். அதை அவர்கள் சொல்ல சொல்லத்தான் எனக்கும் அஜித்துக்குமான நட்பு பலமாக மாறியது. என்னை தொடர்பு கொண்டு என் சொந்த வாழ்க்கை பற்றி, என் மகள் பற்றியெல்லாம் அன்பாக விசாரிப்பார். இதெல்லாம் தெரியாமல் கேமரா முன்பு உட்கார்ந்துகொண்டு பொய்யான, ஆதாரமில்லாத தகவல்களை சிலர் சொல்லி வருகிறார்கள்’ என பொங்கி இருக்கிறார்.

வலைப்பேச்சு: மகிழ் திருமேனி சொன்ன இந்த தகவல்கள் எல்லாவற்றையும் சொன்னது வலைப்பேச்சு யுடியூப் சேனலில்தான். எனவே, வலைப்பேச்சி பிஸ்மி மற்றும் அந்தணன் ஆகியோர் மீதுதான் மகிழ் திருமேனி கோபப்பட்டிருக்கிறார் என டிவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

சிவா
முருகன் 10 ஆண்டுகளாக டிஜிட்டல் செய்தித்துறையில் பணியாற்றி வருகிறார். கடந்த 2018ம் ஆண்டு முதல் சினிரிப்போர்டர்ஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல் மற்றும் பொழுதுபோக்கு செய்திகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.