Magizh Thirumeni: செல்வராகவன் மற்றும் கவுதம் மேனனிடம் சினிமா கற்றவர் மகிழ் திருமேனி. இவர் இயக்கிய முதல் திரைப்படம் ‘முன்தினம் பார்த்தேனே’. 2010ம் வருடம் இப்படம் வெளியானது. அதன்பின் இரண்டு வருடங்கள் கழித்து ‘தடையற தாக்க’ படத்தை எடுத்தார். இந்த படம் மூலம்தான் இவர் ரசிகர்களிடம் பிரபலமானார்.
ஆக்சன் திரில்லர்: அருண் விஜய் நடிப்பில் உருவான இந்த படம் ஒரு பக்கா ஆக்ஷன் திரில்லராக வெளிவந்தது. மகிழ் திருமேனியின் எல்லா படங்களுமே ஆக்ஷன் திரில்லராகவே இருக்கிறது. அடுத்து ஆர்யாவை வைத்து ‘மிகாமன்’, அருண் விஜயை வைத்து ‘தடம்’, உதயநிதியை வைத்து ‘கலக தலைவன்’ போன்ற படங்களை இயக்கினார். இதில் தடம் திரைப்படம் அருண் விஜய்க்கு ஒரு வெற்றிப்படமாக அமைந்தது.
விடாமுயற்சி: அந்நிலையில்தான் விடாமுயற்சி கதைக்கு மகிழ் திருமேனியை டிக் அடித்தார் அஜித். இந்த படத்தின் வேலை கடந்த வருடம் ஜனவரியில் துவங்கி பல காரணங்களால் படப்பிடிப்பு தடைபட்டு ஒருவழியாக இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது. பட வேலைகள் முடிந்து வருகிற பிப்ரவரி 6ம் தேதி விடாமுயற்சி திரைப்படம் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த மகிழ் திருமேனி ‘விடாமுயற்சி படம் உருவான நேரத்தில் பல கட்டுக்கதைகளை சிலர் பேசினார்கள். படம் முடிந்து நான் பேட்ஜ் ஒர்க் பணிக்காக மீண்டும் அஜர்பைஜான் செல்கிறேன் என சொன்னார்கள். என் முதல் படத்திலேயே நான் பேட்ஜ் ஒர்க் செய்தது கிடையாது.
அடுத்து, காட்களை எடுத்து எடிட் செய்து பார்த்துவிட்டு திருப்தியில்லாமல் மீண்டும் அந்த காட்சிகளை எடுத்து வருகிறேன் என சொன்னார்கள். இதை நான் எப்போதும் செய்தது இல்லை. இதை மட்டும் நிரூபித்துவிட்டால் நான் சினிமாவிலிருந்தே போய்விடுகிறேன். இல்லையெனில் அவர்கள் பொய் சொல்வதை நிறுத்திக்கொண்டால் போதும் என எதிர்பார்க்கிறேன்.
அஜித்குமாருடனான நட்பு: அதேபோல், எனக்கும் அஜித்துக்கும் இடையே சண்டை, மனக்கசப்பு என்று சொன்னார்கள். அதை அவர்கள் சொல்ல சொல்லத்தான் எனக்கும் அஜித்துக்குமான நட்பு பலமாக மாறியது. என்னை தொடர்பு கொண்டு என் சொந்த வாழ்க்கை பற்றி, என் மகள் பற்றியெல்லாம் அன்பாக விசாரிப்பார். இதெல்லாம் தெரியாமல் கேமரா முன்பு உட்கார்ந்துகொண்டு பொய்யான, ஆதாரமில்லாத தகவல்களை சிலர் சொல்லி வருகிறார்கள்’ என பொங்கி இருக்கிறார்.
வலைப்பேச்சு: மகிழ் திருமேனி சொன்ன இந்த தகவல்கள் எல்லாவற்றையும் சொன்னது வலைப்பேச்சு யுடியூப் சேனலில்தான். எனவே, வலைப்பேச்சி பிஸ்மி மற்றும் அந்தணன் ஆகியோர் மீதுதான் மகிழ் திருமேனி கோபப்பட்டிருக்கிறார் என டிவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…