தனுஷுக்கு அதுல விருப்பமே இல்லை.. அவரோட பிளானே வேற..! மனம் திறந்த மகிழ் திருமேனி..

தமிழ் சினிமாவில் செல்வராகவன் மற்றும் கௌதம் மேனன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் இயக்குனர் மகிழ் திருமேனி. அதனை தொடர்ந்து தடையறத் தாக்க என்ற திரைப்படத்தின் மூலமாக தனது இயக்குனர் பயணத்தை தொடங்கினார். முதல் திரைப்படத்திலேயே நல்ல அறிமுகத்தை பெற்ற மகிழ் திருமேனி தொடர்ந்து ஐந்து திரைப்படங்களை இயக்கியிருக்கின்றார்.
அதனைத் தொடர்ந்து ஆறாவது படமே இவருக்கு நடிகர் அஜித்தை வைத்து இயக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. அந்த வகையில் விடாமுயற்சி என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருக்கின்றார் மகிழ் திருமேனி. லைக்கா நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தில் அஜித், திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட ஏராளமானோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
இந்த திரைப்படம் கடந்த இரண்டு வருடங்களாக எடுக்கப்பட்ட நிலையில் தற்போது ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றது. அதன்படி வரும் பிப்ரவரி 6ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. படத்தை புரமோஷன் செய்வதற்காக படக்குழுவினர் தொடர்ந்து youtube சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்கள்.
அந்த வகையில் இயக்குனர் மகிழ் திருமேனி தொடர்ந்து பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகின்றார். தற்போது சித்ரா லட்சுமணன் அவர்கள் நடத்தி வரும் டூரிங் டாக்கீஸ் சேனலுக்கு பேட்டி கொடுத்து இருக்கின்றார். அதில் தனது ஆரம்பகால வாழ்க்கை குறித்து பேசி இருக்கின்றார்.
அதில் அவர் தெரிவித்திருந்ததாவது 'செல்வராகவனிடம் முதன்முதலாக உதவி இயக்குனராக பணியாற்றி வந்தேன். அவரைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் அவரிடம் பேசும் போது சினிமாவைத் தவிர வேறு எதையுமே நம்மால் கேட்க முடியாது. சினிமா மீது அவ்வளவு பிரியம் கொண்டவர் செல்வராகவன்.
துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய போது நான் சொன்ன ஒரு காட்சியை கூட அந்த படத்தில் படமாக்கி இருந்தார். அது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதேபோலதான் நடிகர் தனுஷும் தற்போது மிகப்பெரிய நடிகராக வளர்ந்திருக்கின்றார் என்றால் அனைத்திற்கும் காரணம் அவருடைய உழைப்பு.
தனது அப்பா கஸ்தூரிராஜாவை பார்த்து செல்வராகவன் சினிமாவில் நுழைந்தார். ஆனால் தனுசுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்கின்ற ஆசை ஒரு துளி கூட இல்லை. துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பு கேட்டரிங் படித்துக் கொண்டிருந்தார். அவருடைய எண்ணமெல்லாம் கேட்டரிங் படித்து விட்டு அதை சார்ந்த துறையில் பயணிக்க வேண்டும் என்பதுதான்.
ஆனால் செல்வராகவன் கட்டாயப்படுத்தி அந்த படத்தில் நடிக்க வைத்தார். அதன் பிறகு அவருடைய வாழ்க்கை திசை மாறிவிட்டது. ஆனாலும் தற்போது அனைவரும் ஆச்சரியப்படும் நடிகராக மாறி இருக்கின்றார். இது அனைத்திற்கும் காரணம் அவரின் உழைப்பு மட்டும்தான்' என்று அந்த பேட்டியில் செல்வராகவன் மற்றும் தனுஷ் குறித்து வெளிப்படையாக பேசியிருந்தார் மகிழ் திருமேனி.