Categories: latest news

தனுஷுக்கு அதுல விருப்பமே இல்லை.. அவரோட பிளானே வேற..! மனம் திறந்த மகிழ் திருமேனி..

தமிழ் சினிமாவில் செல்வராகவன் மற்றும் கௌதம் மேனன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் இயக்குனர் மகிழ் திருமேனி. அதனை தொடர்ந்து தடையறத் தாக்க என்ற திரைப்படத்தின் மூலமாக தனது இயக்குனர் பயணத்தை தொடங்கினார். முதல் திரைப்படத்திலேயே நல்ல அறிமுகத்தை பெற்ற மகிழ் திருமேனி தொடர்ந்து ஐந்து திரைப்படங்களை இயக்கியிருக்கின்றார்.

அதனைத் தொடர்ந்து ஆறாவது படமே இவருக்கு நடிகர் அஜித்தை வைத்து இயக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. அந்த வகையில் விடாமுயற்சி என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருக்கின்றார் மகிழ் திருமேனி. லைக்கா நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தில் அஜித், திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட ஏராளமானோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படம் கடந்த இரண்டு வருடங்களாக எடுக்கப்பட்ட நிலையில் தற்போது ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றது. அதன்படி வரும் பிப்ரவரி 6ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. படத்தை புரமோஷன் செய்வதற்காக படக்குழுவினர் தொடர்ந்து youtube சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் இயக்குனர் மகிழ் திருமேனி தொடர்ந்து பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகின்றார். தற்போது சித்ரா லட்சுமணன் அவர்கள் நடத்தி வரும் டூரிங் டாக்கீஸ் சேனலுக்கு பேட்டி கொடுத்து இருக்கின்றார். அதில் தனது ஆரம்பகால வாழ்க்கை குறித்து பேசி இருக்கின்றார்.

அதில் அவர் தெரிவித்திருந்ததாவது ‘செல்வராகவனிடம் முதன்முதலாக உதவி இயக்குனராக பணியாற்றி வந்தேன். அவரைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் அவரிடம் பேசும் போது சினிமாவைத் தவிர வேறு எதையுமே நம்மால் கேட்க முடியாது. சினிமா மீது அவ்வளவு பிரியம் கொண்டவர் செல்வராகவன்.

துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய போது நான் சொன்ன ஒரு காட்சியை கூட அந்த படத்தில் படமாக்கி இருந்தார். அது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதேபோலதான் நடிகர் தனுஷும் தற்போது மிகப்பெரிய நடிகராக வளர்ந்திருக்கின்றார் என்றால் அனைத்திற்கும் காரணம் அவருடைய உழைப்பு.

தனது அப்பா கஸ்தூரிராஜாவை பார்த்து செல்வராகவன் சினிமாவில் நுழைந்தார். ஆனால் தனுசுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்கின்ற ஆசை ஒரு துளி கூட இல்லை. துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பு கேட்டரிங் படித்துக் கொண்டிருந்தார். அவருடைய எண்ணமெல்லாம் கேட்டரிங் படித்து விட்டு அதை சார்ந்த துறையில் பயணிக்க வேண்டும் என்பதுதான்.

ஆனால் செல்வராகவன் கட்டாயப்படுத்தி அந்த படத்தில் நடிக்க வைத்தார். அதன் பிறகு அவருடைய வாழ்க்கை திசை மாறிவிட்டது. ஆனாலும் தற்போது அனைவரும் ஆச்சரியப்படும் நடிகராக மாறி இருக்கின்றார். இது அனைத்திற்கும் காரணம் அவரின் உழைப்பு மட்டும்தான்’ என்று அந்த பேட்டியில் செல்வராகவன் மற்றும் தனுஷ் குறித்து வெளிப்படையாக பேசியிருந்தார் மகிழ் திருமேனி.

ramya suresh

Recent Posts

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

8 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

8 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

15 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

16 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

18 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

1 day ago