மகிழ் திருமேனியிடம் அஜித் சொன்ன ஒற்றை வார்த்தை… ஓ அப்போ உண்மைதானா?

by ராம் சுதன் |

Vidaamuyarchi: அஜித் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்ற சந்தேகம் தற்போது எழுந்திருக்கும் நிலையில், தன்னிடம் முதல் முறையாக அஜித் பேசியது குறித்து மகிழ் திருமேனி தெரிவித்திருக்கிறார்.

துணிவு திரைப்படத்திற்கு பின்னர் நடிகர் அஜித்தின் திரைப்படம் இதுவரை வெளியாகி இரண்டு வருடங்களை நெருங்கி இருக்கிறது. விடாமுயற்சி படத்தின் டைட்டில் அறிவிப்புக்கு பின்னர் சூட்டிங் செல்லவே ஆறு மாதங்கள் இழுத்தடிக்கப்பட்டது.

அது மட்டுமல்லாமல் படம் ஷூட்டிங் நடந்த அஜர்பைஜானில் தொடர்ச்சியாக கால சூழ்நிலை காரணமாக அடிக்கடி கேன்சல் செய்யப்பட்டதும் பட்ஜெட்டில் பெரிய அளவில் அடி விழுந்தது. இதனால் லைக்கா நிறுவனம் தன்னுடைய மற்ற படங்களின் ரிலீஸில் கவனம் செலுத்த முடிவெடுத்தது.

இதைத் தொடர்ந்து நடிகர் அஜித் தன்னுடைய அடுத்த படத்தில் ஒப்பந்தமானார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் உடனே நடிக்கவும் தொடங்கினார். அத்திரைப்படத்தின் மொத்த சூட்டிங் பணிகளும் முடிந்துவிட்டது.

ஆனால் விடாமுயற்சி திரைப்படத்தின் ஷூட்டிங் மட்டுமே இன்னும் இழுத்தடிக்கப்பட்டது. இந்த மாதத்தின் துவக்கத்தில் கூட சில காட்சிகள் படமாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து படத்தின் அடுத்த கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது.

சமீபத்தில் இப்படத்தின் டப்பிங் பணிகளை அஜித்குமார் முடித்து கொடுத்திருக்கிறார். இந்நிலையில் படம் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், இன்னும் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இதனால் படம் பொங்கல் தினத்தில் வெளியாக வாய்ப்பே இல்லை என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கள் எழுந்திருக்கிறது. இதனால் ரசிகர்கள் விடாமுயற்சி ட்ரைலரை உடனே வெளியிட வேண்டும் என படக்குழுக்கு ஒரு பக்கம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குனர் மகிழ் திருமேனி, பிரேக் டவுன் படத்தின் கதையை அஜித்குமார் தன்னிடம் சொன்னபோது என்னை கண்ணை மூடிக்கொண்டு நம்புங்கள் என்றார். நாங்கள் பேசிய 10 நாளில் சூட்டிங் சென்று விட்டோம். அஜித்தின் கனவை படமாக்க மட்டுமே நான் செய்தேன் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

Next Story