கொடுத்த வாக்கை காப்பாற்ற பெரிய ஹீரோவை மிஸ் செய்த மகிழ்திருமேனி.. எவ்வளோ நேர்மை!..

Director Mazhil thirumeni: தமிழ் சினிமாவில் இயக்குனர் கௌதம் மேனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தவர் இயக்குனர் மகிழ் திருமேனி. முதன் முதலாக தடையற தாக்க என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். முதல் திரைப்படத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்ற மகிழ் திருமேனி அடுத்ததாக அருண் விஜயை வைத்து தடம் என்கின்ற திரைப்படத்தை இயக்கினார்.
இந்த திரைப்படம் திரில்லர் படமாக உருவாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க இயக்குனர்களின் ஒருவராக மாறினார். அதனை தொடர்ந்து மீகாமன், கழக தலைவன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய மகிழ் திருமேனி அடுத்ததாக நடிகர் அஜித்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார்.
நடிகர் அஜித்தின் 62வது திரைப்படமாக உருவாகி வந்த விடாமுயற்சி திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த திரைப்படம் கடந்த இரண்டு வருடங்களாக எடுக்கப்பட்டு வந்தது. தமிழ் சினிமாவில் தொடர்ந்து நல்ல திரைப்படங்களை கொடுத்து வந்தாலும் விடாமுயற்சி திரைப்படம் தான் இவருக்கு அடுத்த கட்டத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால் இந்த திரைப்படம் தொடங்கியதில் இருந்து அஜித் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகி வருகின்றார் மகிழ் திருமேனி. அதற்கு காரணம் இவர் படத்தை எடுத்து முடிப்பதற்கு எடுத்துக்கொண்ட நேரம் தான். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக விடாமுயற்சி திரைப்படம் எடுக்கப்பட்டது. அஜர்பைஜானில் ஏற்பட்ட கால சூழ்நிலை காரணமாக படம் எடுப்பதில் தாமதம் என்று தொடர்ந்து கூறி வந்தார்கள்.
மேலும் இந்த திரைப்படம் தொடங்கியதில் இருந்து படம் தொடர்பான எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்து வந்தது. ஆனால் சமீபத்தில் படத்தில் இருந்து வெளியான டீசர், ஃபர்ஸ்ட் சிங்கில், டிரெய்லர் போன்றவை அனைத்தும் ரசிகர்களுடைய நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. மேலும் படம் வருகிற பிப்ரவரி 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதால் தொடர்ந்து பட குழுவினர் புரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் இயக்குனர் மகிழ் திருமேனி youtube சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகின்றார். அதில் விடாமுயற்சி திரைப்படம் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து வருகின்றார். கடந்த 2 நாட்களாக சமூக வலைதள பக்கங்களில் விடாமுயற்சி திரைப்படம் குறித்து இயக்குனர் மகிழ் திருமேனி பேசியதுதான் ட்ரெண்டிங்கில் இருந்து வருகின்றது.
இந்நிலையில் தற்போது தடம் திரைப்படம் குறித்தும் அருண் விஜய் குறித்தும் மகிழ்திருமேனி பேசிய வீடியோவானது வைரலாகி வருகின்றது. அதில் அவர் தெரிவித்திருந்ததாவது 'முதலில் தடம் திரைப்படத்திற்கு வேறு ஒரு ஹீரோவை அணுகி இருந்தேன். அவரும் மிக ஆர்வமாக இருந்தார் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு, அதன் பிறகு சில காரணங்களால் அவர் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனது.
அந்த சமயத்தில் தான் அருண் விஜய் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். அப்போது அவர் ஒரு ஆக்சன் படத்தில் நடிக்க வேண்டும் என்கின்ற ஆர்வத்தில் இருந்தார். இந்த படத்தின் கதையை கூறிய பிறகு இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டார். அதன் பிறகு அடுத்த கட்டமாக இந்த திரைப்படத்தை புரடியூசர்களிடம் கொண்டு சென்றோம். முதலில் இந்த திரைப்படத்தை வேறு ஒரு நிறுவனம் தயாரிக்க இருந்தது.
அதன் பிறகு ஒரு பெரிய நடிகரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அவர் லைகா நிறுவனத்திடம் சென்று இந்த கதையை கூறுங்கள். நாம் படம் செய்வோம் என்று கூறியிருந்தார். பின்னர் அவரிடம் நான் அருண் விஜயை வைத்து இந்த திரைப்படத்தை இயக்குவதாக கூறிவிட்டேன். அப்போது நான் ஒரு ரூபாய் கூட முன்பணம் வாங்கவில்லை. அதேசமயம் லைக்கா நிறுவனத்தில் இருந்து எனக்கு மிகப்பெரிய தொகையை அட்வான்ஸாக கொடுப்பதற்கு ரெடியாக இருந்தார்கள்.
ஆனாலும் அருண் விஜய்க்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக பெரிய சம்பளம், நட்சத்திரம் என அனைத்தையும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு அருண் விஜயை வைத்து இப்படத்தை இயக்கினேன். அந்த சமயத்தில் நிச்சயம் அடுத்த திரைப்படம் ஒரு பெரிய நடிகருடன் இருக்கும் என்பதை நான் நம்பினேன். அதேபோல் சரியான வாய்ப்பு எனக்கு அமைந்தது' என்று அந்த பேட்டியில் கூறி கூறியிருந்தார்.