ஆரம்பிச்சு முடிக்கிற வரைக்கும் எவ்வளவுதான் பேசுவீங்க!.. நொந்து பேசிய மகிழ்திருமேனி..!

விடாமுயற்சி: தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் அஜித் தொடர்ந்து சினிமாவில் பிஸியாக நடித்து வந்த அஜித் தற்போது கார் பந்தயத்தில் கவனம் செலுத்தி வருகின்றார். இந்த வருடம் முழுவதும் கார் ரேஸில் கலந்து கொள்ள இருப்பதால் கடந்த வருடத்தில் தான் கமிட் செய்திருந்த இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்பையும் முடித்து கொடுத்து விட்டார்.
துணிவு திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அஜித் கமிட்டான திரைப்படம் தான் விடாமுயற்சி. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் கடந்த இரண்டு வருடங்களாக எடுக்கப்பட்டு வந்தது. ஒரு வழியாக கடந்த டிசம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து தற்போது பிப்ரவரி மாதம் 6ம் தேதி ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றது.
இந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பல்வேறு காரணங்களால் படம் வெளியாகவில்லை. இதனைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் டிரைலர் வெளியான நிலையில் அந்த படத்தை பிப்ரவரி 6ம் தேதி வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
இது ஒரு புறம் இருக்க விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே நடிகர் அஜித் கமிட்டான திரைப்படம் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படம் கடந்த வருடம் எடுத்து முடிக்கப்பட்டது. தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் வரும் ஏப்ரல் 10ம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தை வெளியிடுவதற்கு படக்குழுவினர் முடிவு செய்திருக்கிறார்கள்.
அதன்படி 2025 ஆம் ஆண்டு அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்கள் அஜித் நடிப்பில் வெளியாக இருக்கின்றது. முதலில் விடாமுயற்சி திரைப்படம் வெளியாக இருப்பதால் தொடர்ந்து புரமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் இயக்குனர் மகிழ்திருமேனி youtube சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகின்றார்.
அதில் அவர் விடாமுயற்சி திரைப்படம் தொடங்கியதிலிருந்து முடியும் வரை வந்த பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கின்றார். படம் தொடங்கியவுடன் எனது பெயரை அறிவித்த உடனே சோசியல் மீடியாக்களில் என்னை குறித்து பேச தொடங்கி விட்டார்கள். நிச்சியம் அஜித் மகிழ்திருமேனியை தேர்வு செய்திருக்க மாட்டார் என்று கூறி வந்தார்கள்.
பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகு நிச்சயம் அஜித்துக்கும் மகிழ்ந்திருமேனிக்கும் செட் ஆகாது என்று கூறினார்கள். அதைத்தொடர்ந்து படம் எடுத்துக் கொண்டிருந்தபோது எனக்கும் அஜித்துக்கும் பிரச்சனை வந்துவிட்டது. எனக்கும் த்ரிஷாவுக்கும் பிரச்சினை வந்துவிட்டது. படம் வெளியாவதற்கு சற்று தாமதமான போது படம் டிராப் ஆகிவிட்டது என்பதில் தொடங்கி படத்தின் டீசர் வெளியான போது டீசர் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை என்று கூறினார்கள்.
ஆனால் படத்தின் டீசர் மிக அருமையாக வந்திருந்தது. அஜித்தின் டயலாக் எதுவுமே இல்லை என்று அதையும் விமர்சனம் செய்தார்கள். பின்னர் சவதிக்கா பாடல் வெளியாகி டிரெண்டிங்கில் இருந்தது. ஆனால் அந்தப் பாடலையும் குறை சொன்னவர்கள் அதற்கு அடுத்து சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அதில் அஜித் சாரின் வசனம் இருந்தது. ஆக்ஷன் காட்சிகள் என அனைத்துமே கலந்து இருந்தது.
அவர்களால் எந்த ஒரு விமர்சனத்தையும் முன்வைக்கவில்லை இருப்பினும் ஏதாவது ஒரு குறை சொல்ல வேண்டும் என்பதற்காகவே ஆரம்பத்தில் இருந்து ஒரு கும்பல் படம் குறித்து திட்டமிட்டு நெகட்டிவ்வான கருத்துக்களை கூறிக் கொண்டே இருந்தார்கள்' என்று பேசியிருந்தார் மகிழ் திருமேனி.