கூட இருந்தவங்களே முதுகுல குத்திட்டாங்க!. புலம்பும் மகாலட்சுமி!. என்னம்மா ஆச்சி!…

Published on: March 18, 2025
---Advertisement---

Mahalakshmi Ravinder: பிரபலங்களின் வித்தியாசமான கல்யாணங்கள் எப்போதுமே ரசிகர்களிடம் நிறைய விஷயங்களை பேச வைக்கும். அப்படி ஒரு ஜோடியாக தான் இன்றளவும் இருக்கின்றனர் தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் நடிகை மகாலட்சுமி.

ஃபேட்மேன் என அடையாளத்துடன் அழைக்கப்படுபவர் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன். இவர் தமிழ் சினிமாவில் தயாரித்த படங்களை விட இவருடைய பிக் பாஸ் விமர்சனம் நிகழ்ச்சி தான் இவருக்கு பெரிய அளவில் புகழை பெற்று கொடுத்தது.

பல சீசன்களாக பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். தொடர்ந்து ஒரு நாள் அவருடைய திருமண அறிவிப்பு வெளியானது. அதை பார்த்த ரசிகர்கள் பலருக்கும் ஒரு பக்கம் அதிர்ச்சியும் இன்னொரு பக்கம் ஆச்சரியமும் இருந்தது.

ஏனெனில் அவருடைய மனைவி பிரபல சின்னத்திரை நடிகை மகாலட்சுமி. 90’s கிட்களின் பேவரட் தொகுப்பாளனியாக இருந்த மகாலட்சுமி எப்படி ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார் என்ற ஆர்வம் பலருக்கும் தொத்திக் கொண்டது. இதைத்தொடர்ந்து இத்தம்பதிகளின் பேட்டிகளை ரசிகர்கள் தொடர்ச்சியாக பார்த்து வந்தனர்.

தற்போது அவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகளும் கடந்து விட்டது. அவ்வப்போது இருவரும் விவாகரத்து செய்து கொள்வதாக அறிவிப்புகள் வந்தாலும் அதை இருவரும் தூசு போல தட்டி இன்னும் காதல் ஜோடிகளாக தான் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

தற்போது இருவரும் மீண்டும் பேட்டி ஒன்றை கொடுத்திருக்கின்றனர். அதில் அவர்கள் பேசுகையில், இப்படி ஒரு அழகான பெண் எப்படி இவரை திருமணம் செய்து கொண்டார் என்ற கோபத்தில் தான் அடிக்கடி விவாகரத்து வதந்தியை கிளப்பி விடுகின்றனர். அதை பார்த்து நாங்கள் சிரித்துக் கொள்வோம்.

எங்கள் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என தெரிந்து கொள்ள எல்லோருக்கும் இன்னமும் ஆர்வம் இருக்கிறது. தொடர்ந்து முதுகில் குத்துபவர்கள் வெளியில் இருந்து யாரும் வர மாட்டார்கள். நம்முடனே நமக்கு நெருக்கமாக இருக்கும் நண்பர்கள் தான் நம்மை முதுகில் குத்துவார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment