மகாநதி சீரியலுக்கு டாட்டா காட்டிய முக்கிய நடிகை… ஆனா அந்த சீரியலில் மட்டும் இருக்காங்க…
மகாநதி சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வந்த ஹீரோயின் திடீரென மாற்றப்பட்டு இருக்கும் தகவல் அவர் ரசிகர்களை கவலையடைய வைத்து இருக்கிறது.
சென்னையில் சட்டம் படிக்க ஆசையுடன் வந்த திவ்யா கணேஷை சின்னத்திரை அல்வா போல் அள்ளிக்கொண்டது. முதலில் தொகுப்பாலினியாக சில தொலைக்காட்சிகளில் வேலை செய்து வந்த திவ்யா கணேஷ் கேளடி கண்மணி சீரியல் மூலம் நடிப்புக்குள் காலடி வைத்தார்.
அதைத் தொடர்ந்து அவருக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த லட்சுமி வந்தாச்சு சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் அதில் திவ்யா வில்லியாக நடித்திருப்பார். பெரிய அளவில் அந்த சீரியல் அவருக்கு எடுபடாமல் போக தன்னுடைய ரூட்டை பாசிட்டிவாகவே மாற்ற வேண்டும் என முடிவெடுத்தார்.
அதைத்தொடர்ந்து, திவ்யா கணேஷ் வில்லி ரோல் நடித்தாலே அது பெரிய அளவில் ஹிட்டு அடிக்காமல் இருந்தது. இதைத் தொடர்ந்து அவருக்கு பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் மருமகளாக ஜெனி கேரக்டரில் திவ்யா எண்ட்ரி கொடுத்ததில் இருந்து தற்போது வரை அவருக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம்.
பெரும்பாலும் சின்ன திரையில் ரசிகர்கள் மற்றும் ஹேட்டர்கள் என இரு சாராரும் இருக்கும் நிலையில், ரசிகர்கள் மட்டுமே இருக்கும் ஒரு சில கேரக்டரில் ஜெனி கேரக்டரும் ஒன்று. இதைத்தொடர்ந்து திவ்யா கணேஷ் மகாநதி தொடரில் கங்கா கதப்பாத்திரத்தை ஏற்று நடித்து வந்தார். திவ்யாவை ரசிகர்கள் கங்காவாக ரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில் டெங்கு காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திவ்யா கணேஷ் தான் மகாநதி சீரியலில் இருந்து வெளியேறி இருப்பதாக கூறி இருக்கிறார்.
மருத்துவமனையில் இருந்ததால் ஷீட்டிங்கில் கலந்து கொள்ள முடியாத நிலை உருவானது. இதனால் கங்கா கேரக்டருக்கு வேறு நாயக்கியை பார்த்தாக வேண்டிய சூழ்நிலை சீரியல் நிர்வாகத்திற்கு உருவானது. அதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. நீங்கள் கங்கா கேரக்டருக்கு கொடுத்த தொடர் ஆதரவுக்கு நன்றி. விரைவில் சந்திப்போம் எனவும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால் இதுவரை பாக்கியலட்சுமி தொடர் குறித்து அவரிடம் இருந்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை. இது குறித்து விசாரித்த போது, பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனியின் கேரக்டருக்கு தற்போது பெரிய காட்சிகள் இல்லாததால், அவர் இல்லாமல் சமாளித்து விடலாம் என்பதால் திவ்யா தொடர்ந்து ஜெனியாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.