போன வருஷம் ஜூன் 14ம் தேதி இதே நாளில் தான் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு கம்பேக் படமாக மகாராஜா படம் வெளியானது. நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாச்சனா, அனுராக் காஷ்யப், நட்டி நட்ராஜ், சிங்கம் புலி, மம்தா மோகன் தாஸ், அபிராமி, திவ்யபாரதி, முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் 150 கோடி வரை வசூல் லட்சுமியை அள்ளிக் கொடுத்தது.
லட்சுமி எனும் குப்பைத் தொட்டியை காணோம் என போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து உட்கார்ந்துக் கொண்டு விஜய் சேதுபதி தனது நடிப்பால் பண்ண அலப்பறையும், அதற்கு பின்னால் இருந்த வலி மிகுந்த காரணமும், தனது மகளை நாசமாக்கியவனை தேடி கண்டு பிடித்து அவனுக்கு புரியும்படி ஒரு உண்மையை புரிய வைத்து தற்கொலை செய்துக் கொள்ள வைக்கும் அட்டகாசமான கதையில் நடித்திருந்தார்.
ஆனால், அந்த படத்துக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த விடுதலை 2 வெளியானது. தத்துவமா பேசியே ரம்பம் போடுறாரு என அந்த நல்ல படத்தை பெரிதாக ரசிகர்கள் விரும்பவில்லை.
காமெடியாக ஒரு படம் கொடுப்போம் என யோகி பாபுவை நம்பி அவருடன் சேர்ந்துக் கொண்டு கதையே இல்லாத மொக்கை கதையில் ஜாலியாக மலேசியாவை டூர் அடித்துக் கொண்டே நடித்த ஏஸ் திரைப்படம் மாமன் படத்துக்கு அடுத்த வாரம் வெளியாகி அதற்கு முன்னதாகவே ஓடிடியில் வெளியாகி விட்டது.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற நிலையில் தான் கமல்ஹாசன் இந்தியன் 2, தக் லைஃப் என மொக்கைப் படங்களாக கொடுத்து வருகிறார் என்றும் விஜய் சேதுபதியும் அப்படியே மாறிவிட்டார் என்றும் மீண்டும் பழைய மகாராஜாவாக அவர் வரவேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ட்ரெயின் எப்போது வரும் என்றே தெரியவில்லை. பிசாசு 2 படமே பல வருஷமாக கிடப்பில் உள்ளது. தலைவன் தலைவி படம் விஜய் சேதுபதிக்கு ஃபீல் குட் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இட்லி கடை ரிலீஸ் தள்ளிப்போகவுள்ள நிலையில், தலைவன் தலைவி நித்யா மேனனுக்கும் கைகொடுக்கும்.
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…