ஆட்டோவில் வந்த மகாராஜா இயக்குநருக்கு BMW பரிசளித்த விஜய் சேதுபதி!.. நயன்தாரா என்ன தரப்போறாரோ?..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:40:21  )

விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான மகாராஜா படத்தின் 100-வது நாள் வெற்றி விழாவில் படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி இணைந்து இயக்குனர் நெற்றியில் இருந்து சாமிநாதனுக்கு BMW சொகுசு கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளனர்.

கலைஞர் டிவியில் ஒளிபரப்பான நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற நித்திலன் சாமிநாதன் முதல் படமாகவே மகாராஜா படத்தை இயக்க திட்டமிட்டார்.

நடிகர் சாந்தனு விடும் அந்த கதையை சொன்னபோது அந்த படம் உருவாகாமல் தாமதமாகிக் கொண்டே வந்த நிலையில், விதார்த்தை வைத்து குரங்கு பொம்மை படத்தை முதலில் எடுத்து முடித்தார்.

அதன் பின்னர் மகாராஜா படத்தை விஜய் சேதுபதியை வைத்து இயக்கிய நிலையில் இந்த ஆண்டு வெளியான அந்த திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் வேட்டை நடத்தி 100 நாட்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்துள்ளது.

மேலும், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் 18 கோடி ரூபாய்க்கு விற்பனையான அந்த திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று சுமார் 150 கோடி ரூபாய் சம்பாதித்து இருப்பதாக கூறப்படுகிறது.

இத்தனை பெரிய வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் நித்திலன் சாமிநாதனுக்கு மகாராஜா படத்தின் தயாரிப்பாளர்கள் புதிய BMW பரிசாக வழங்கியிருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நித்திலன் சாமிநாதன் அடுத்ததாக நயன்தாராவை வைத்து மகாராணி என்கிற படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அடுத்த படத்திற்கு நயன்தாரா என்ன பரிசு கொடுக்க போகிறார் என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நிலையில், தனது அடுத்த படத்திற்காக மீசையை முழுவதுமாக நீக்கிவிட்டு நடித்து வருகிறார். நித்திலன் சாமிநாதனுக்கு பரிசோ வழங்கும் போது கூட அதே தோற்றத்தில் தான் விஜய் சேதுபதி வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story