ஹிந்தியில் ரீமேக்காகும் ‘மகாராஜா’ திரைப்படம்! யார் நடிக்கிறாங்க தெரியுமா? இவர விட சரியான ஆளு இல்ல

by ராம் சுதன் |

சமீபத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் எப்பேற்பட்ட வெற்றியை பதிவு செய்தது என அனைவருக்கும் தெரியும். நித்திலன் சுவாமி நாதன் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று ஹவுஸ் ஃபுல்லாக ஓடியது. ஏற்கனவே நித்திலன் இயக்கத்தில் குரங்கு பொம்மை படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஆனால் மகாராஜா படத்தில் கிடைத்த பேர் குரங்கு பொம்மையில் கிடைக்கவில்லை. காரணம் எல்லாமே பெரிய நடிகர்களை வைத்துதான் எல்லாமே திட்டமிடப்படுகின்றன. ஒரு பக்கம் மகாராஜா படத்தின் கதை , திரைக்கதை எல்லாமே நன்றாக இருந்தாலும் விஜய்சேதுபதியின் நடிப்பு என வரும் போது படத்திற்கு கூடுதல் வலு சேர்த்தது என்றுதான் சொல்லவேண்டும்.

இன்று வரை அந்தப் படத்தை மீண்டும் மீண்டும் பார்த்தவர்கள் ஏராளம். படத்தை பாராட்டவதர்களே இல்லை. ஆரம்பத்தில் ஒரு கோழையாக இருக்கும் விஜய்சேதுபதி கடைசி வரைக்கும் இப்படித்தான் இருப்பாரா? அமைதியாகவேதான் இருப்பாரா என்ற கேள்வியை ரசிகர்கள் மனதில் எழ வைத்து அதன் பின் இடையில் ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தி அனைரையும் பிரமிக்க வைத்திருப்பார்.

அங்கேயே எல்லாத்தையும் உடைத்துவிட்டார். அதுமட்டுமில்லாமல் விஜய்சேதுபதியின் 50வது படம் எனும் போது இது விஜய்சேதுபதிக்கே பெருமை சேர்த்த படமாகவும் அமைந்திருக்கிறது. இந்த நிலையில் மகாராஜா படத்தை ஹிந்தியில் ரீமேக் ஆக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.

ஆனால் ஹிந்தியில் யார் இயக்கப் போகிறார் என்று தெரியவில்லை. ஆனால் விஜய்சேதுபதி நடித்த கேரக்டரில் ஹிந்தியில் அமீர்கான் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கதையை அப்படியே ரீமேக் செய்ய இருப்பதால் ஒரு சில காட்சிகள் மட்டும் வட இந்திய கலாச்சாரத்திற்கு ஏற்ப மாற்றுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

எப்படி இருந்தாலும் தமிழில் எந்தளவு வெற்றிபெற்றதோ அதே அளவு ஹிந்தியிலும் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏனெனில் நித்திலன் திரைக்கதை மாதிரி ஹிந்தியில் வெளியானால் ஹிந்தியிலும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகும் என்று சொல்லப்படுகிறது.

Next Story