டிடிஎப் வாசன் ஒரு குப்பை!.. வேஸ்ட் பீஸ்!... மஞ்சள் வீரன் டைரக்டரு இப்படி பொங்கிட்டாரே!...
TTF Vasan: நெடுஞ்சாலைகளில் பைக்கை வேகமாக ஓட்டி வீடியோ போட்டு இளசுகளிடம் பிரபலமானவர் டிடிஎப் வாசன். இன்ஸ்டகிராம் மற்றும் யுடியூப்பில் இவரை பலரும் பின்பற்றி வருகிறார்கள். குறிப்பாக 17 வயது முதல் 20 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள்தான் இவரின் ஃபாலோயர்ஸ்களாக இருக்கிறார்கள்.
ஆனால், இளைஞர்களை அவர் தவறாக வழிநடத்துவதாக இவர் மீது பலரும் புகர் சொன்னார்கள். இவரை பார்த்து இவரை போலவே இளைஞர்கள் பலரும் தனது பெற்றோர்களிடம் விலை உயர்ந்த பைக்கை வாங்கி கொடுக்க சொல்லி அடம்பிடித்து அந்த பைக்கை வாசன் போலவே வேகமாக ஓட்டி பழகுவதாக சொல்லப்பட்டது.
ஒருபக்கம் வாசன் பல சர்ச்சைகளிலும் சிக்கினார். நெடுஞ்சாலை ஒன்றில் பைக்கை வேகமாக ஓட்டும்போது கீழே விழுந்து விபத்தில் சிக்கினார். இதையடுத்து, அவரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டது. மேலும், அவர் இனிமேல் பைக் ஓட்டக்கூடாது என நீதிமன்றம் தடை விதித்தது.
அடுத்து லைசென்ஸ் இல்லாத நிலையில் கார் ஓட்டி சர்ச்சையில் சிக்கினார். இதற்காகவும் இவர் மீது போக்குவரத்து போலீசார்வழக்குப்பதிவு செய்தனர். ஒருபக்கம், மஞ்சள் வீரன் என்கிற படத்திலும் நடிக்க துவங்கினார். டிடிஎப் வாசன்தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என பில்டப் கொடுத்தார் அப்படத்தின் இயக்கினர் செல்அம்.
ஆனால், சமீபத்தில் அப்படத்திலிருந்து டிடிஎப் வாசன் நீக்கப்படுவதாக செல்அம் அறிவித்தார். ஆனால், நான்தான் பட பூஜை மற்றும் டெஸ்ட் ஷூட்டிக்கு எல்லாம் செலவு செய்தேன். என்னிடம் கேட்காமலேயே என்னை படத்திலிருந்து தூக்கிவிட்டனர். இது நம்பிக்கை துரோகம் என்றெல்லாம் பொங்கினார் டிடிஎப் வாசன்.
இந்நிலையில், இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேசியுள்ள மஞ்சள் வீரன் இயக்குனர் செல்அம் ‘வாசன் சொன்ன பேச்ச கேட்கமாட்டான். பெத்த அம்மாவை புழல் ஜெயில் முன்னாடி நிக்க வச்சான். அவன் டோட்டல் வேஸ்ட். சரியான குப்பை.. மனுஷன் ஒரு தடவ தப்பு பண்ணலாம்.. வாழ்நாள் பூரா தப்பு பண்ணக் கூடாது. அவன் பைக் ஓட்டி இளைஞர்களை கெடுக்கறத நிறுத்தணும்.. என்னை திட்டி வீடியோ போட்டு அதுல பணம் சம்பாதிச்சி என்னோட உழைப்புல சாப்பிட்டிட்டு இருக்கான்’ என கோபமாக பேசியிருக்கிறார் செல்அம்.