ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தீபாவளி ரிலீஸாக வெளியான திரைப்படம் அமரன். படம் வெளியாகி 4 நாள்கள் ஆகியும் இன்னும் திரையரங்குகளில் கூட்டம் கூட்டமாக மக்கள் இருப்பதை பார்க்க முடிகின்றது. அந்தளவுக்கு ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது. சிவகார்த்திகேயன் கேரியரில் அமரன் திரைப்படம் வாழ்நாள் முழுவதும் பேசும் திரைப்படமாக அமையும்.
ஃபேமிலி ஆடியன்ஸில் இருந்து இளைய தலைமுறையினரும் படத்தை கண்டுகளித்து வருகின்றனர். அதுவரை மேஜர் முகுந்த் பற்றி பெரிதாக தெரியாத மக்களுக்கு இந்தப் படம் அவரின் வீரத்தியாகத்தை பற்றி எடுத்துக் காட்டியிருக்கிறது. படம் முடிந்ததும். மேஜர் முகுந்த் ஒவ்வொரு ரசிகரின் நெஞ்சத்தில் குடிபோனார் என்றுதான் சொல்லவேண்டும்.
அந்தளவுக்கு படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சிவகார்த்திகேயனை படத்தில் சிவகார்த்திகேயனாக பார்க்காமல் ரியல் முகுந்த் வரதராஜனாகவேதான் அனைவரும் பார்க்கிறார்கள். அப்படி சிவகார்த்திகேயன் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.
2006 ஆம் ஆண்டு லெப்டினண்டாக தடம் பிடித்த முகுந்த் 2008 ஆம் ஆண்டு கேப்டன் முகுந்த் வரதராஜனாக பதவி உயர்வு பெற்றார். அதற்கு அடுத்த வருடமே மேஜர் முகுந்தாக மேலும் பதவி உயர்வு பெற்றார். அதன் பிறகுதான் தனது நீண்ட நாள் காதலியான இந்து ரெபக்கா வர்க்கீஸை கரம் பிடித்தார். திருமணமாகி இரண்டு வருடம் கழித்து அழகான பெண் குழந்தை இவர்களுக்கு பிறந்தது.
மேஜர் முகுந்த் இறந்த பிறகு அவருடைய மனைவியை முகுந்தின் தந்தை ‘ உனக்கு சின்ன வயதுதான்மா.. வேண்டுமென்றால் இரண்டாவது திருமணம் செய்து கொள்’ என கூறினாராம். அதற்கு இந்து ‘ நான் இரண்டாவது திருமணம் செய்வேனு நினைக்கீறீங்களாப்பா’ என கேட்டாராம். அதிலிருந்து இப்போதுவரை தன் மகளுக்காகவும் குடும்பத்திற்காகவுமே இந்து வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் மேஜர் முகுந்தின் தந்தை அளித்த இன்னொரு பேட்டியும் வைரலாகி வருகின்றது. ரஜினி நடித்த எந்திரன் படம் ரிலீஸான நேரம் அது. அப்போது மேஜர் முகுந்த் இந்தூரில் இருந்தாராம். பெற்றோர் பம்பாயில் இருந்தார்களாம். மேஜர் முகுந்தை பார்க்க பெற்றோர் இந்தூர் சென்றார்களாம். அப்போது முகுந்தின் கமெண்டரின் மனைவி எந்திரன் படம் பார்க்க ஏற்பாடு செய்திருந்தாராம்.
உடனே முகுந்த் அவரிடம் ‘என் பெற்றோர் வருகிறார்கள். அவர்களுடன் சேர்ந்து நான் படம் பார்க்கிறேன்’ என கூறியிருக்கிறார். அதற்கு அந்த கமெண்டரின் மனைவி ‘வரட்டும். எங்களுடனும் சேர்ந்து ஹிந்தியில் படம் பார். பிறகு உன் பெற்றோருடன் சேர்ந்து பார்’ என கூற அதற்கு முகுந்த் ‘ரஜின் படத்தை தமிழில் தான் பார்ப்பேன்’ என சொல்லி வந்து விட்டாராம். இதை கேட்டதும் அந்த கமெண்டரின் மனைவிக்கு கோபம் வர அதை முகுந்தின் மனைவி இந்துவிடம் காட்டினாராம்.
Kanguva: சூர்யா…
Kanguva: கங்குவா…
சிறுத்தை சிவாவின்…
சிறுத்தை சிவா…
தமிழ் சினிமாவில்…