சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் அமரன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு ஜிவி இசையமைத்திருந்தார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருந்தார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனும் சாய் பல்லவியும் நடித்திருந்தார்கள் என்பதைவிட அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த அளவுக்கு தன்னுடைய நடிப்பால் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்து விட்டனர் சிவகார்த்திகேயனும் சாய் பல்லவியும். படத்தை பார்த்த அனைவரின் கருத்தாக படத்தில் சாய் பல்லவிக்கு பதிலாக வேறு எந்த நடிகை நடித்திருந்தாலும் இந்த அளவு மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றிருக்குமா என்பது சந்தேகம்தான் என்றுதான் அனைவரும் கூறி வருகிறார்கள்.
படம் ஒரு பக்கம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தாலும் படத்தைப் பற்றிய சில விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அதாவது உண்மையிலேயே மேஜர் முகுந்த் பிராமணர் குடும்பத்தில் இருந்து வந்தவர் .ஆனால் அதைப்பற்றி படத்தில் எந்தவித குறியீடும் காட்டப்படவில்லையே என்றுதான் அனைவரின் விமர்சனமாக பார்க்கப்படுகிறது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக படத்தின் வெற்றி விழாவை கொண்டாடிய நேற்று இயக்குனர் பல்வேறு தகவல்களை பகிர்ந்து இருக்கிறார். படம் ஆரம்பிக்கும் போது மேஜர் முகுந்த் மனைவியான இந்து ஒரே ஒரு கோரிக்கை மட்டும் வைத்திருந்தாராம். அதாவது மேஜர் முகந்த் ஒரு தமிழர். அதனால் ஒரு தமிழ் நடிகரை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என கேட்டுக் கொண்டாராம்.
அதனால் இயக்குனருக்கு நினைவில் வந்தது சிவகார்த்திகேயன் தானாம். சிவகார்த்திகேயன் ஒரு அக்மார்க் தமிழன் என்று நேற்று அந்த மேடையில் கூறி பெருமிதம் கொண்டார் ராஜ்குமார் பெரியசாமி. அது மட்டுமல்ல மேஜர் முகுந்தின் தந்தையான வரதராஜனும் அவருடைய தாயும் ஒரு கோரிக்கை வைத்தார்களாம்.
அதில் மேஜர் முகுந்த் தான் ஒரு இந்தியன். தமிழன் என்று சொல்ல தான் ஆசைப்படுவார். அவருடைய சான்றிதழில் கூட எந்த ஒரு ஜாதி குறியீடும் இருக்காது. அதனால் அப்படியே படத்தில் காட்டுங்கள் என கேட்டுக் கொண்டார்களாம் .இப்படித்தான் அந்த படத்தில் நாங்கள் வைத்திருக்கிறோம் என இயக்குனர் கூறி இருக்கிறார்.
Kanguva: சூர்யா…
Kanguva: கங்குவா…
சிறுத்தை சிவாவின்…
சிறுத்தை சிவா…
தமிழ் சினிமாவில்…