தங்கலானை தொடர்ந்து சர்தார் 2விலும் அதை செய்யும் மாளவிகா மோகனன்!.. செல்லத்த பத்திரமா பார்த்துக்கோங்க!
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி, ராஷி கன்னா, ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்த சர்தார் திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியாகி சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தை ஓட விட்டது. அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2ம் பாகத்தில் கார்த்தி நடித்து வருகிறார்.
சர்தார் 2 படத்தில் ரஜிஷா விஜயன் மற்றும் மாளவிகா மோகனன் கார்த்திக்கு ஜோடியாக நடித்து வருகின்றனர். எஸ்.ஜே. சூர்யா இந்த படத்தில் மெயின் வில்லனாக மாறியுள்ளார்.
சர்தார் 2 படத்தில் மாளவிகா மோகனன் நடித்து வரும் நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். சர்தார் 2 படத்துக்காக ரொம்பவே கஷ்டமான ஸ்டண்ட் பண்ணப் போவதாக அறிவித்து அதற்காக ரோப்களை எல்லாம் கட்டி ரெடியாகும் காட்சிகளை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்த தங்கலான் படத்தில் எருமை மாட்டின் மீதெல்லாம் ஏறி ஆரத்தியாக அதிரடியாக சிலம்பம் சண்டை போட்டு கெத்துக் காட்டினார் மாளவிகா மோகனன்.
பாலிவுட் படமான யோதா படத்தில் எந்தளவுக்கு டூபீஸ் உடையில் பீச்சில் கவர்ச்சி காட்டி நடிக்க முடியுமோ அந்தளவுக்கு கவர்ச்சி காட்டி நடித்தாலும் அந்த படம் தோல்வியை தழுவியது.
சர்தார் 2 படத்தின் ஸ்டண்ட் காட்சியில் ஏற்கனவே சண்டை பயிற்சியாளர் ஏழுமலை என்பவர் விழுந்து உயிரிழந்த நிலையில், மாளவிகா மோகனன் செல்லத்தை பத்திரமா பார்த்துக்கோங்க சர்தார் டீம் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
கார்த்தி படத்தைத் தொடர்ந்து பிரபாஸின் ராஜா சாப் படத்திலும் மாளவிகா மோகனன் தான் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது. பான் இந்தியா ஹீரோயினாக வலம் வருகிறார் நம்ம தங்கலான் தங்கம்.