விக்ரம் படத்துல நடிச்சி 5 டாக்டர்கிட்ட போனேன்!.. பகீர் கிளப்பும் நடிகை!...

by ராம் சுதன் |

தமிழ் சினிமாவில் சேது திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் விக்ரம். அதற்கு முன் அவர் நடிப்பில் வெளியான மீரா உள்ளிட்ட சில படங்கள் ஓடவில்லை. அதன்பின்னர்தான் பாலாவின் அறிமுகம் கிடைத்து சேது படத்தில் நடித்தார். இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.

அதன்பின் தில், தூள் என ஹிட் படங்களை கொடுத்தார். ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்து வெளியான சாமி படம் விக்ரமை ஒரு வசூல் மன்னனாக மாற்றியது. நிறைய ஹிட் படங்களில் நடித்தார். கமல்ஹாசன் போல, சிவாஜி போல விதவிதமான கெட்டப்புகளில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை விக்ரமுக்கு எப்போதும் உண்டு.

அதனால்தான் காசி, ஐ போன்ற கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார். ஐ படத்தில் உடலில் 60 சதவீத எடையை குறைத்து நடித்தார். அந்த வரிசையில் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் திரைப்படம்தான் தங்கலான். 50களில் கர்நாடக மாநிலத்தில் உள்ள தங்க சுரங்கத்தில் என்ன நடந்தது என்பதை ரஞ்சித் படமாக எடுத்திருக்கிறார்.

இது இந்தியாவை வெள்ளையர்கள் ஆண்டபோது நடந்த சம்பவம். அதை தத்ரூபமாக கொண்டு வந்திருக்கிறார் ராஞ்சித். இந்த படத்தில் அசத்தலான வேடத்தில் அசத்தி இருக்கிறார் விக்ரம். இப்படம் தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இந்த படத்தில் நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன் ‘தங்கலான் படத்தில் நடிக்கும்போது 5 மருத்துவர்களிடம் செல்வேன். தோல், கண், சருமம் என எல்லாமே பாதிக்கப்படும். ஏனெனில், கெமிக்கல் கலந்த மேக்கப் உடலை அரிக்கும். எரிச்சலை கொடுக்கும். மிகவும் கஷ்டப்பட்டு நடித்தேன்’ என சொல்லி இருக்கிறார்.

சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களிடம் பிரபலமான மாளவிகாவுக்கு தங்கலான் படத்தில் ஒரு நல்ல வேடம் கிடைத்திருக்கிறது. தங்கலான் படம் வருகிற ஆகஸ்டு 15ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Next Story