Categories: Cinema News latest news

அப்பாவிற்கு ட்ரீட்மெண்ட் பார்க்க போன இடத்தில்… பீஸ்ட் நடிகரின் கார் விபத்து நடந்தது எப்படி? தம்பி பகீர் பேட்டி

Shine Tom Chacko: மலையாளத்தில் பிரபலமாக இருந்தாலும் தமிழில் பீஸ்ட், குட் பேட் அக்லி படங்களில் நடித்த ஷைன் டாம் டாக்கோ கார் கோரமாக நடந்த விபத்து குறித்து அவர் தம்பி பேசி இருக்கும் வீடியோ வெளியாகி இருக்கிறது.

பீஸ்ட் படத்தில் நடித்து இருந்தவர் ஷைன் டாக் சாக்கோ. ஆனால் அப்படத்தில் கிடைத்த புகழை விட பின்னர் இப்படம் குறித்தும் விஜய் குறித்தும் இவர் விமர்சித்து பேசிய வீடியோ வைரலாகி அதிக புகழை பெற்றார்.

இந்நிலையில் இவர் தன்னுடைய அப்பா, அம்மா, சகோதரருடன் தந்தையின் சிகிச்சைக்காக சென்று இருக்கிறார். இவர்கள் சென்ற காரை அனீஸ் என்பவர் ஓட்டி சென்று இருக்கிறார். இன்று காலை இவர்கள் சென்ற கார் தருமப்புரி மாவட்டம் பாலக்கோடு அருகே கொடூரமாக லாரியின் மீது மோதி அப்பளமாக நொறுங்கியது.

இதில் ஷைன் டாம் தந்தை சாக்கோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவரின் மருத்துவத்துக்கு தான் பெங்களூர் சென்றதும் குறிப்பிடத்தக்கது. ஷைன் டாம் சாக்கோவிற்கு இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும், மற்றவர்களுக்கு கடும் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து பேசிய ஷைனின் தம்பி கோயமுத்தூர் வரை நான் தான் வண்டி ஓட்டினேன். பின்னர் அனீஸ் என்ற டிரைவர் கார் ஓட்டினார். அதன் பின்னர் தான் விபத்து நடந்ததாக தெரிவித்தார். தற்போது இதுகுறித்த விசாரணையும் நடந்து வருகிறது.

ஷைன் டாம் சாக்கோ ஏகப்பட்ட பரபரப்பை கிளப்பி இருக்கிறார். இதற்கு முன் 2 கோடி அளவில் இவரிடம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சிறிது காலம் கைதாகி பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மலையாள நடிகை வின்சி அலோசிஸ் தான் நடித்த ஒரு படத்தில் நடிகர் போதை பயன்படுத்தி நடித்தார்.

ஒரு காட்சியில் அவருடன் நடிக்கும் போது வாயில் இருந்து திரவம் மாதிரி ஒன்று வெளியானது. நான் உடை சரி செய்ய கேரவன் போன பின்னர் என்னுடன் உள்ளே வந்து தகாத முறையில் நடந்தார் என பெயரை குறிப்பிட்டாமல் குற்றச்சாட்டை முன் வைத்தார். ஆனாலும் ஷைன் சாக்கோ மீது மலையாள நடிகர் சங்கத்திடம் புகார் கொடுத்து சிக்க வைத்தார்.

இப்படி ஏகப்பட்ட விஷயங்களில் பிரச்னையில் சிக்கி இருக்கும் இவரின் இந்த விபத்து தற்போது பரபரப்பாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.

Published by
ராம் சுதன்