90களில் கேரளாவை கலக்கிய அமானுஷ்ய திரைப்படம்- மம்முட்டியின் அய்யர் தி கிரேட்
நடக்கப்போவதை முன்பே அறிவிக்கும் தமிழ் படங்கள் தென்னக மொழி படங்கள் மிகவும் குறைவாகவே வந்துள்ளன. அவை விரல் விட்டு எண்ணி விடும் அளவிலேயே உள்ளன. ஒரு சிலருக்கு ஈ.எஸ்.பி பவர் அதிகமாக இருக்கும். நடக்கப்போவதை முன் கூட்டியே அறியும் திறனும் இருக்கும். தமிழ்நாட்டில் சில நாட்களுக்கு முன் வாழ்ந்த ஒரு பிரபல ஜோதிடர் நம்புங்கள் நாராயணனுக்கு இது போன்ற ஈ.எஸ்.பி சக்தி இருந்ததாக கூறப்படுவதுண்டு.
இந்தியாவிலும் வெளிநாட்டிலும் ஈ.எஸ்.பியை சக்தி உள்ள விந்தை மனிதர்கள் பலர் இருக்கிறார்கள். ஈ.எஸ்.பி சக்தி எனப்படும் நடப்பதை முன்கூட்டியே அறியும் சக்தி கொண்ட மனிதராக மம்முட்டி நடித்த படம்தான் அய்யர் தி கிரேட்.
1990 ஆகஸ்ட் 31ல் இப்படம் வெளிவந்தது 31 வருடங்கள் ஆகி விட்டது. இப்படத்தை இயக்கியவர் மலையாள இயக்குனர் பத்ரன். எம்.எஸ்.வி இப்படத்துக்கு இசையமைத்திருந்தார்.
சாதாரணமாக வியாபாரம் செய்து வரும் மம்முட்டிக்கு அழகிய மனைவி கீதா, அம்மா சுகுமாரி என அன்பான குடும்பமாய் வாழ்கிறார். தன்னுடைய செல்ல கிளியை பிடிக்க மரத்தில் ஏறிய மம்முட்டிக்கு தவறி கீழே விழுந்ததில் அக்ரோ போபியா என்ற நோய் வந்து விடுகிறது. அதுதான் நடப்பதை முன் கூட்டியே அறியும் ஈஎஸ்பி பவர் கொண்ட நோயாகும்.
திடீர் சக்தி கிடைக்க பெற்ற மம்முட்டி நிறைய பயணிகளுடன் செல்லும் ரயில் விபத்துக்குள்ளாக போகிறது என ரயில்வேயை எச்சரிக்கிறார்.அவரின் எச்சரிக்கையை பொருட்படுத்தாதால் விபத்து நேரிடுகிறது.
இது போல் டெல்லியில் நடக்க இருக்கும் ஒரு விமான விபத்தையும் எச்சரிக்கிறார். அதன் படி செயல்பட்டதால் விமான விபத்து தவிர்க்கப்படுகிறது இதனால் அய்யர் ஓவர் நைட்டில் பாப்புலர் ஆகி தலைப்பு செய்திகளில் வருகிறார்.
ஒரு கட்டத்தில் வில்லன் தேவன் குரூப் குழந்தைகளுக்கு ஸ்டெராய்டு கலந்த உணவுப்பொருளை கலக்க இருக்கிறார்கள் என ஈஎஸ்பியால் தெரிந்து அதை தடுக்க போராடுகிறார். நிருபர் ஷோபனா உதவியுடன் வில்லன் கோஷ்டியை அய்யர் சீண்ட , வில்லன் குரூப் அய்யர் குடும்பத்தை தீர்த்துக்கட்டுகிறது.
இறுதியில் வில்லனை தீர்த்துக்கட்டிய அய்யர் வில்லன் சுட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் தன்னுடைய மரணத்தை தன் அதீத சக்தியால் உணர்ந்து அறிவிக்கிறார் அவர் அறிவித்தபடி மரணம் நடந்ததா என்பதை பரபரப்பும் விறுவிறுப்பும் வித்தியாசமான திரைக்கதையும் கலந்து சொன்னபடம்தான் அய்யர் தி கிரேட்.
இப்படம் நன்றாக ஓடியதால் மலையாளத்தில் இருந்து தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வந்தது.
சிறந்த எடிட்டிங்குக்காக இப்படம் தேசிய விருதை வென்றது. எம்.எஸ் மணி எடிட் செய்திருந்தார். வாய்ப்புக்கிடைத்தால் பார்த்து ரசிக்க கூடிய படம்தான் யூ டியூபில் கிடைக்கும் கண்டு களியுங்கள்.