நாயகன்லாம் இல்ல… அப்பவே தாதாவை மணிரத்னம் செமயா காட்டிட்டாரு… எந்தப் படம் தெரியுமா?

Published on: August 8, 2025
---Advertisement---

சமீபத்தில் நடந்த தக்லைஃப் ஆடியோ வெளியீட்டு விழா தமிழ் சினிமா உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. கமல், சிம்பு, மணிரத்னம், ஏ.ஆர்.ரகுமான் என பெரிய ஜாம்பவான்கள் இணைந்துள்ள படம். 9 பாடல்களையும் ஹிட்டாகக் கொடுத்து அசத்தியுள்ளார் ஆர்.ரகுமான். படத்திற்கான புரொமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வரும் ஜூன் 5ல் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் படம் ரிலீஸ் ஆகிறது.

படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு வந்துள்ளது. சிம்புவுக்கு தக் லைஃப்புக்கு அடுத்ததாக பெரிய படங்கள் பல வர உள்ளன. அந்த வகையில் இதுகுறித்த பல தகவல்களை மூத்த பத்திரிகையாளர் ராஜகம்பீரன் சொல்றாரு. என்னன்னு பாருங்க. முள்ளும் மலரும் படத்தில் ரஜினிகாந்த் தான் நடிக்கணும்னு அடம்பிடிச்சி மகேந்திரன் நடிக்க வைத்தார்.

அவர் வேணாம்னு தயாரிப்பாளர் சண்டை போட்டாரு. அவரு வேணாம்னா படமே எனக்கு வேணாம்னு சொன்னாரு மகேந்திரன். சிம்பு எல்லாரையும் பார்க்கறதும், மணிரத்னம் பார்க்குறதுலயும் வித்தியாசம் இருக்கு. வேற வேற தலைமுறைகளாக இருந்தாலும் சினிமாவில் அப்டேட் எல்லாம் தெரிந்தவர்கள் தான் கமலும், சிம்புவும்.

நிழல் உலக தாதாவை மணிரத்னத்தை விட வேறு யாரும் செய்ய முடியாது. பகல்நிலவுல சத்யராஜ் கேரக்டர் தாதா தான். நாயகன்தான் அதுல உச்சம். சேதுவைத் தாண்டி பாலா மெகா ஹிட்டைக் கொடுக்கவே முடியல. ஆட்டோகிராபைத் தாண்ட முடியல சேரன். அது மாதிரி நாயகனின் எல்லையைத் தாண்டுற முயற்சி தான் தக் லைஃப். அஞ்சுவண்ண பூவே, விண்வெளி நாயகா, ஜிங்குச்சா என எல்லாமே சூப்பர்ஹிட் சாங்.

சிம்புவுக்கு பீப் சாங் வந்து பேரு டேமேஜ் ஆனபோது ஏஆர்.ரகுமான் அவரைக் கூப்பிட்டுப் பாட வைக்கிறாரு. அது ஹிட் ஆனதும் பல மொழிகளில் 150 பாடல்களுக்கு மேல பாடினாராம். அது ஏஆர்.ரகுமான் சாரால தான் நடந்ததுன்னு மேடையிலயே சிம்பு சொன்னாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment