ஆம்பளயா இருந்தா நேர்ல வாடா!.. நான் ரெடி!. டிடிஎப் வாசனுக்கு சவால் விடும் இயக்குனர்!...
விலை உயர்ந்த பைக்குகளில் அதிவேகமாக பைக் ஓட்டி அதை வீடியோவாக வெளியிட்டு விசில் அடிச்சான் குஞ்சிகளிடம் பிரபலமானவர் டிடிஎப் வாசன். சிறுவர்கள் பலரும் அவரின் ரசிகர்களாக இருக்கிறார்கள். இவரின் சமூகவலைத்தள பக்கங்களை வாலிபர்கள் பலரும் பின் தொடர்ந்து வருகிறார்கள்.
ஆனால், இவரை பார்த்து வாலிபர்கள் கெட்டு போகிறார்கள் என்கிற புகாரும் இவர் மீது இருக்கிறது. இவர் வைத்திருப்பது போல விலை உயர்ந்த பைக்குகளை தங்களுக்கு வாங்கி கொடுக்கும்படி பலரும் தங்களின் பெற்றோர்களிடம் சண்டை போடுவதாகவும், அப்படி வாங்கி கொடுத்தால் அவர்களும் வேகமாக வண்டியை ஓட்டி சாகசத்தில் ஈடுபட்டுவதாகவும் சொல்லப்படுகிறது.
இதில், பலரும் விபத்திலும் சிக்குவதுண்டு. டிடிஎப் வாசன் கூட சில மாதங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் சிக்கினார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவிக்க அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவரின் டிரைவிங் லைசென்ஸும் ரத்து செய்யப்பட்டது. லைசென்ஸ் இல்லாமல் கார் ஓட்டியதாகவும் இவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
ஒருபக்கம், மஞ்சள் வீரன் என்கிற படத்திலும் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் செல்அம் இயக்குவதாக சொல்லப்பட்டு பட அறிவிப்போடு, போஸ்டரும் வெளியானது. ஆனால், இப்போது வரை படப்பிடிப்பு துவங்கப்படவில்லை. இந்நிலையில்தான் டிடிஎப் வாசன் அப்படத்திலிருந்து தூக்கப்பட்டார்.
ஆனால், பட பூஜை முதல் எல்லாவற்றுக்கும் நான்தான் செலவு செய்தேன். என்னிடம் எதுவும் கேட்காமல் என்னை தூக்கிவிட்டனர் என வீடியோ போட்டார் டிடிஎப் வாசன். ஆனால், வாசன் ஒரு குப்பை. பைக் ஓட்டி இளைஞர்களை கெடுக்கிறான். பெத்த அம்மாவை ஜெயில் முன்னாடி நிக்க வச்சான். அவன் திருந்தவே மாட்டான். ஷூட்டிங்கே வரமாட்டான். அதனால வேற ஒரு ஹீரோவை போட்டு படத்தை எடுக்கபோறேன்’ என பொங்கினார் செல்அம்.
ஆனால், தன் மீது தவறே இல்லை என்பது போல தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார் டிடிஎப் வாசன். இந்நிலையில், கோபமடைந்த செல்அம் ‘ஆம்பளையா இருந்தா நேர்ல வா.. டிடிஎப் வாசனுக்கு திராணி இருந்தால் நேரில் வர சொல்லுங்கள்.. நானும் இறங்குறேன்.. எல்லா மீடியாவையும் கூப்பிடலாம்.. ஒரு தேதியை சொல்லுங்கள்.. எல்லார் முன்னையும் பேசுவோம். யார் மீது தப்புன்னு தெரியும்’ என பேசியிருக்கிறார் செல்அம்.