மஞ்சள் வீரன் வாய்ப்பை தட்டி தூக்கிய அந்த நடிகர்!. அட பூஜையே போட்டாங்க!.. போட்டோ பாருங்க!..
Manjalveeran: சர்ச்சை யூட்யூபர் டிடிஎஃப் வாசன் நடிக்க இருந்த மஞ்சள் வீரன் படத்தின் அடுத்த ஹீரோ குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.
யூட்யூபர் டிடிஎஃப் வாசன் தன்னுடைய பைக் சாகசங்களால் பெரிய அளவில் இளைஞர் பட்டாளத்தை தன்னுடன் வைத்திருந்தார். ஒருமுறை ரசிகர்கள் சந்திப்பை அவர் கூட்ட லட்சத்திற்கும் அதிகமானோர் ஒரே இடத்தில் கூலி பலரை அதிர்ச்சி அடைய செய்தனர். அதிலிருந்தே வாசலுக்கான பிரச்சனைகள் தொடங்கியது.
நிறைய இடங்களில் விமர்சிக்கப்பட்டார். சமீபத்தில் கைதாகி சிறை வரை சென்று வந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் அவர் நடிப்பில் செல் அம் இயக்கத்தில் மஞ்சள் வீரன் என்னும் திரைப்படம் உருவாக இருப்பதாக போஸ்டர் உடன் தகவல்கள் வெளியானது.
ஆனால் அதை தொடர்ந்து அடுத்த கட்ட அப்டேட் குறித்த எந்த தகவலும் படக்குழு இடம் இருந்து வெளியாகவில்லை. இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் செல் அம் டிடிஎஃப் வாசனை இப்படத்தில் இருந்து நீக்கிவிட்டதாக விரைவில் புதிய ஹீரோ அறிவிக்கப்படுவார் எனவும் தெரிவித்திருந்தார்.
அதைத்தொடர்ந்து டிடிஎஃப் வாசனும் இது குறித்து தனக்கு தெரியாது என பேசி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்படத்தில் டிடிஎஃப் வாசனை இருக்கு பதில் நடிகர் கூல் சுரேஷ் படக்குழு ஒப்பந்தம் செய்திருப்பதாக அறிவித்துள்ளனர். படத்திற்கான பூஜையும் நடந்து முடிந்து இருக்கிறது.
இது குறித்த அதிகாரப்பூர்வ புகைப்படங்களும் மற்றும் வீடியோக்களும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பொதுவாகவே கூல் சுரேஷ் மற்ற ஹீரோக்களின் படங்களுக்கு ஓவர் பிரமோஷன் செய்து கடுப்பேத்துவார். இனி அவருடைய அலப்பறையால் ரசிகர்கள் கடுப்பில் இருப்பதாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.