Categories: latest news

மனோபாலா கடைசியாக சொன்ன அந்த வார்த்தை… இயக்குனர் சுந்தர்.சி. நெகிழ்ச்சி

காமெடி நடிகர்களில் மனோபாலாவின் நடிப்பு அனைவரும் ரசிக்கும் வகையில் இருக்கும். ஒரு அப்பாவித்தனம், ஆச்சரியம் கலந்து அவரது எக்ஸ்பிரஷன் இருக்கும். அது மட்டும் அல்லாமல் அவரது நகைச்சுவை மற்ற நடிகர்களிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். இது அவருக்கு மட்டுமே உரிய ஸ்டைல்.

மதகஜராஜா: அந்த வகையில் 12 வருஷம் கழித்து இப்போது வந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் மதகஜராஜாவிலும் அவர் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.

சுந்தர்.சியிடம் சொன்னது: அவர் படத்தில் மொத்தம் 15 நிமிடங்களே வந்தாலும் வரும் நேரம் எல்லாம் கலகலப்புதான். சுந்தர்.சியிடம் இந்தப் படம் குறித்து என்ன சொன்னார் தெரியுமா? இந்தப் படம் மட்டும் வந்தால் நான் வேற லெவலுக்குப் போயிடுவேன் என்றாராம்.

மருத்துவமனையில் மனோபாலா: அரண்மனை 4ல் இவருக்காகவே சில காட்சிகளை தயார் செய்து வைத்திருந்தாராம் சுந்தர்.சி. ஆனால் அப்போது மனோபாலா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அதன்காரணமாக அவரே சுந்தர்.சி.க்கு போன் பண்ணி ‘சாரிடா… என்னை மன்னிச்சுக்க என்னால இந்தப் படத்துல நடிக்க முடியாது.

கடைசி வார்த்தை: வேற நடிகரைப் போட்டுக்க’ன்னு சொல்லி ஆஸ்பத்திரியில இருக்குற போட்டோவையும் அனுப்பினாராம். ‘அதுக்கென்ன இந்த ஒரு படம்தானே… பரவாயில்லை. அடுத்த படத்துல பார்த்துக்கலாம்’னு சுந்தர்.சி. சொன்னாராம்.

‘இல்லடா நான் ரொம்ப நாள் இருக்க மாட்டேன்’னும் சொல்லி சுந்தர்.சி.யை கண்கலங்கச் செய்துவிட்டாராம் மனோபாலா. மனோபாலாவும், சுந்தர்.சி.யும் வாடா போடா என்று அழைக்கும் வகையில் நெருக்கமானவர்களாம்.

கமலுடன் நெருக்கம்: நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகத்திறன் கொண்டவர். 175 படங்கள் வரை நடித்துள்ளார். 40 படங்களை இயக்கியுள்ளார். இவர் திரைப்படத்துறையில் கமலுடன் மிகவும் நெருக்கமானவர். இவரது வளர்ச்சியில் பெரிய பங்கு கமலுக்கு உண்டு.

இயக்கிய படங்கள்: அதேபோல பாரதிராஜாவுக்கு உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். இவர் இயக்கத்தில் பல படங்கள் சூப்பர்ஹிட் ஆகியுள்ளன. குறிப்பாக ஆகாய கங்கை, பிள்ளை நிலா, ஊர்க்காவலன், என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான், மல்லு வேட்டி மைனர், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், மூடுமந்திரம், சிறைப்பறவை ஆகிய படங்களைச் சொல்லலாம்.

வேட்டைக்காரன், சிங்கம், சிறுத்தை, திண்டுக்கல் சாரதி, காஞ்சனா, நண்பன், சகுனி, துப்பாக்கி ஆகிய படங்களில் இவரது நடிப்பு அசத்தலாக இருக்கும்.

sankaran v

Recent Posts

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

6 minutes ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

12 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

13 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

14 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

15 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

21 hours ago