Thug life: இயக்குனர் மணிரத்னமும், நடிகர் கமல்ஹாசனும் தமிழ் சினிமாவில் சிறந்த ஆளுமைகளாக பார்க்கப்படுகிறார்கள். இவர்கள் இருவரும் இணைந்து உருவான நாயகன் படம் இந்திய சினிமாவில் ஒரு முக்கியமான படமாக இருக்கிறது. இந்த படத்தின் கதை, திரைக்கதையை மிகவும் சிறப்பாக எழுதி இயக்கியிருந்தார் மணிரத்னம். சினிமாவுக்கு வர ஆசைப்பட்ட பலருக்கும் இப்படம் பாடமாக இருக்கிறது.
எனவே, மணிரத்னமும், கமலும் இணைந்து உருவான தக் லைப் படம் மீதும் பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. அதுவும் தக் லைப் ஒரு கேங்ஸ்டர் படம் என்பதாலும், இந்த படத்தில் கமலுடன் இணைந்து சிம்புவும் நடித்திருந்ததாலும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதோடு, நாயகனை விட சிறப்பாக இருக்க வேண்டும் என வேலை செய்திருக்கிறோம் என கமல் புரமோஷனில் பேசினார்.
ஆனால், இப்படம் வெளியாகி ரசிகர்களை ஏமாற்றிவிட்டது. கமல், சிம்பு போன்ற நடிகர்கள் இருந்தும் படத்தின் கதை, திரைக்கதையில் மணிரத்னம் கோட்டை விட்டதாக சொல்லப்பட்டது. அதோடு, அன்பான மனைவி இருந்தும் கமல் திரிஷாவை கீப்பாக வைத்திருப்பது, அவருக்கு பின் சிம்பு திரிஷாவை கீப்பாக வைத்துக்கொள்வது போன்ற காட்சிகள் ரசிகர்களூக்கு அதிருப்தியை கொடுத்தது.
அதோடு இதை வைத்து சமூகவலைத்தளங்களில் பலரும் கலாய்த்து மீம்ஸ் போட்டார்கள். திரிஷா யாருக்கு சொந்தம் என்பதுதான் படத்தின் கதை என கிண்டலடித்தார்கள். ஒருபக்கம் புளூசட்ட மாறன் இது பிட்டு படம் போல இருக்கிறது என தன் பங்குக்கு வன்மத்தை கக்கினார். மொத்தத்தில் நெகட்டிவ் விமர்சனங்களால் தக் லைப் ஒரு தோல்விப்படமாக மாறிவிட்டது. படம் வெளியாகி ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில் இப்படம் 42 கோடியை மட்டுமே வசூல் செய்திருக்கிறது.
இந்நிலையில், வீடியோ ஒன்றில் பேசியுள்ள நடிகர் மன்சூர் அலிகான் ‘ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களில் ஒரு இறையருள் இருக்கும். ஆஸ்கர் விழாவில் எல்லா புகழும் இறைவனுக்கு என சொன்னவர். ஒரு படத்தில் ‘எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே’ என பாடல் போட்டார். இஸ்லாமிய பாடல்களின் சந்தம் அவரின் பாடல்களில் இருக்கும்.
தக் லைப் படத்தில் இடம் பெற்ற ‘முத்தமழை’ பாடலின் சந்தமும் அப்படித்தான். அது இறையருளோடு தொடர்புடைய ஒரு பாடலின் சந்தம் ஆகும். அந்த பாடல் படத்தில் இடம் பெற்றிருந்தால் படம் ஹிட் அடித்திருக்கும் என்பது என் எண்ணம்’ என பேசியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…