டார்க் வெப், விபிஎன், டெலிகிராம் குரூப்!.. கஞ்சா சேல்ஸில் கலக்கிய மன்சூர் அலிகான் மகன்!...

by சிவா |

Mansoon alikahan: தமிழ் சினிமாவில் குரூப்பில் நடனமாடும் ஒருவராக இருந்தவர் மன்சூர் அலிகான். நடிக்க வேண்டும் என்கிற ஆசையில் விஜயகாந்திடம் அவர் வாய்ப்பு கேட்க தான் தயாரித்து நடித்த கேப்டன் பிரபாகரன் படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் படத்திலேயே அசத்தலான நடிப்பை கொடுத்து ரசிகர்களிடம் பிரபலமானார்.

கேப்டன் பிரபாகரன் படம் சூப்பர் ஹிட் அடிக்கவே மன்சூர் அலிகானுக்கு நிறைய வாய்ப்புகள் வந்தது. ஒரு படத்தில் தானே ஹீரோவாகவும் நடித்தார். மனைவியை அடித்தது, ஒரு கேசட் கடையை அடித்து நொறுக்கியது என அடிக்கடி வழக்குகளில் சிக்குவார். இதுவரை பலமுறை போலீசார் இவரை கைது செய்திருக்கிறார்கள்.

சினிமாவில் எப்படியோ அப்படித்தான் நிஜ வாழ்விலிலும் சண்டித்தனம் செய்வார். ஆனால், நாட்டின் மீது மிகவும் அக்கறை கொண்டவர் மன்சூர் அலிகான். காவேரி விவகாரம் உள்ளிட்ட பல பிரச்சனைகளிலும் ஒன்றிய அரசை எதிர்த்து பல கருத்துக்களை கூறியிருக்கிறார். சென்னை மெரினாவில் மாணவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு விழாவிலும் கலந்து கொண்டார்.

தற்போது காமெடி கலந்த வில்லன் வேடங்களில் கலக்கி வருகிறார். இந்நிலையில்தான், சமீபத்தில் அவரின் அலிகான் துக்ளக்கை கஞ்சா வழக்கில் போலீசார் கைது செய்தனர். சென்னையில் சில கஞ்சா மற்றும் மெத்தபெட்டமைன் போன்ற போதைப்பொருட்களை பயன்படுத்தும் கல்லூரி மாணவர்களை போலீசார் விசார்ணை செய்த போதுதான் அலிகான் துக்ளக் சிக்கினார்.

அவரை போலீசார் நீதிமன்றத்துக்கு வேனில் அழைத்து வந்த போது மகனை பார்த்து மன்சூர் அலிகான் அறிவுரை சொல்லும் வீடியோக்களும் வெளியானது. இந்நிலையில், மன்சூர் அலிகான் மகனிடம் போலீசார் நடத்திய சோதனையில் பல பகீர் தகவல்கள் தெரியவந்திருக்கிறது.

டார்க் வெப், VPN ஆகியவற்றின் மூலமாக பாங்காக்கில் இருந்து ஓ.ஜி காஞ்சா ஆர்டர் செய்து, விமானம், கப்பல், கொரியர் மூலமாக சென்னைக்கு வரவழைத்திருக்கிறார். அதன்பின், வாட்ஸ் அப், டெலிகிராம் குரூப் மூலம் அதை கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்திருக்கிறார். ஒரு கிராம் கஞ்சாவை 1500-க்கு வாங்கி 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது. அலிகான் துக்ளக்குடன் இணைந்து இன்னும் எத்தனை பேர் இதை செய்தார்கள் என போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Next Story