மந்த்ரா நடிக்க வேண்டிய கேரக்டரா அது? சிம்ரன் நடிச்சு பேர் வாங்கிட்டாங்களே

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:36:32  )

தமிழ்த்துறை உலகில் ஒரு டாப் நடிகையாக இருந்தவர் நடிகை சிம்ரன். 90கள் காலகட்டத்தில் இவர்தான் ஒரு முன்னணி நடிகையாக இருந்தார். அந்த நேரத்தில் வேறெந்த நடிகையாலும் இவருடைய இடத்தை அடைய முடியவில்லை. கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கும் மேலாக ஒரு முன்னணி ஹீரோயின் என்ற அந்தஸ்தை பெற்று வந்தார்.

இவருடைய நடனத்திற்கு என தனி ரசிகர் பட்டாளங்களே இருக்கின்றனர். கிளாமராகவும் ஸ்டைலாகவும் செண்டிமெண்டாகவும் என எந்த கெட்டப் கொடுத்தாலும் அதில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய நடிகை தான் சிம்ரன். நீண்ட நாள் நண்பரை திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் செட்டிலானார் சிம்ரன்.

திருமணத்திற்கு பிறகு குழந்தைகள் குடும்பம் என வாழ்ந்து வந்த இவர் சமீப காலமாக பல படங்களில் மீண்டும் இவரை பார்க்க முடிகிறது. அந்தகன் திரைப்படத்தில் யாரும் எதிர்பார்க்காத ஒரு நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் சிம்ரன். அதன் பிறகு தயாரிப்பாளராகவும் களமிறங்கி இருக்கிறார்.

இந்த நிலையில் சிம்ரன் இடத்தில் நான் தான் இருக்க வேண்டியது என பிரபல நடிகை சொன்ன தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அவர் வேறு யாருமில்லை நடிகை மந்த்ரா. இவரும் 90ல் காலகட்டத்தில் ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக இருந்தவர் தான்.

கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் சிம்ரன் நடிப்பில் வெளியான திரைப்படம் நட்புக்காக. இந்த படத்தில் முதலில் மந்த்ராவை தான் கே எஸ் ரவிக்குமார் அணுகினாராம் .கால்சீட் தேதி எல்லாம் கொடுத்துவிட்டு நீ தான் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என சொன்னாராம் ரவிக்குமார்.

அந்த தேதிகளை பார்க்கும்பொழுது அதே தேதிகளில் பல படங்களில் அதுவும் தெலுங்கு படங்களில் கால்ஷீட் கொடுத்து இருந்தாராம் மந்த்ரா. அதனால் நட்புக்காக படத்தில் நடிக்க முடியாமல் போனது என கூறினார். பிரியம் படத்தின் மூலம் அறிமுகமான மந்த்ராவின் நடிப்பை பார்த்து தான் நட்புக்காக படத்தில் ரவிக்குமார் அவரை அணுகி இருக்கிறார்.

நட்புக்காக படத்திலிருந்து தான் சிம்ரன் யார் என்று வெளியில் தெரிய ஆரம்பித்தது. அதன் பிறகு தான் அவருடைய மார்க்கெட் உச்சத்திற்கு போனது. ஒருவேளை அந்த படத்தில் நான் நடித்திருந்தால் கூட நானும் சிம்ரன் இடத்தில் இருந்திருப்பேன் என கூறினார் மந்த்ரா.

ஆனால் தமிழ் ரசிகர்கள் என்னை ஒரு கிளாமர் நடிகையாகவே பார்க்க ஆசைப்பட்டனர். தமிழைப் பொறுத்த வரைக்கும் பெரும்பாலும் கிளாமரில் தான் நான் நடித்திருக்கிறேன் என மந்த்ரா ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

Next Story