விடாமுயற்சியால் சொதப்பிய மொத்த பிளான்... வீர தீர சூரன் ரிலீஸ் அப்டேட் இதுதான்..!

விடாமுயற்சி: தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தை கடந்த இரண்டு வருடங்களாக எடுத்து வந்தார்கள். இந்த திரைப்படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் ஒரு வழியாகி விட்டார்கள். அந்த அளவிற்கு படத்தை ஜவ்வு போல் இழுத்து எடுத்து முடித்து இருக்கின்றார் இயக்குனர் மகிழ்திருமேனி.
இந்த திரைப்படம் இவ்வளவு தாமதமானதற்கு காரணம் அஜர்பைஜானில் ஏற்பட்ட காலதாமதம் தான் என்று கூறி வந்தார்கள். ஒரு வழியாக கடந்த டிசம்பர் மாதம் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்டது. சரி பொங்கல் பண்டிகைக்கு நிச்சயம் படம் வெளியாகி விடும் என்கின்ற நம்பிக்கையில் ரசிகர்கள் இருந்து வந்தார்கள். ஆனால் அதிலும் பெரிய கல்லை தூக்கி போட்டு விட்டது லைக்கா நிறுவனம்.
பொங்கல் பண்டிகைக்கு அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகாது என்கின்ற அறிவிப்பு வெளியானது. இடைத்தொடர்ந்து சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியானது. டிரைலருடன் வரும் பிப்ரவரி 6ஆம் தேதி படத்தை வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. விடாமுயற்சி திரைப்படம் வெளியாவதற்குள் தமிழ் சினிமாவில் பல மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டது.
பொங்கல் பண்டிகைக்கு விடாமுயற்சி திரைப்படம் வெளியாகின்றது என்கின்ற செய்தியை கேட்டவுடன் பல திரைப்படங்கள் பின்வாங்கி விட்டது. அதில் ஒரு திரைப்படம் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி இருந்த வீரதீர சூரன் திரைப்படம் ஆகும். இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி இருந்த திரைப்படம் வீரதீரசூரன்.
இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாகம் முதலில் ரிலீஸ் ஆக இருப்பதாகவும் அதற்கு அடுத்ததாக முதல் பாகம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் விக்ரமுடன் சேர்ந்து துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் டீசர் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.
முதலில் இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி வந்த நிலையில் விடாமுயற்சி திரைப்படத்தின் வருகையால் இப்படத்தை வெளியிடாமல் இருந்து வந்தார்கள். ஆனால் கடைசி நிமிடத்தில் விடாமுயற்சி திரைப்படம் பின் வாங்கியதால், வீர தீர சூரன் படத்தை ரிலீஸ் செய்வதற்கான போதிய ஏற்பாடுகள் செய்யாத காரணத்தால் படத்தை ரிலீஸ் செய்யாமல் விட்டு விட்டனர்.
இதனை தொடர்ந்து ஜனவரி 26 ஆம் தேதி அல்லது 30 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது தொடர்பான எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாமல் இருந்து வந்தது. இந்நிலையில் இந்த திரைப்படம் தற்போது மார்ச் 31ஆம் தேதி அதாவது ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியிட இருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறி வருகிறார்கள். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.