Mari selvaraj: திரைப்படங்களில் இரண்டு வகை இருக்கிறது. பெரும்பாலும் எல்லோராலும் ரசிக்கப்படும் ஜனரஞ்சக சினிமா. மற்றொன்று கலை சினிமா. ஜனரஞ்சக சினிமா என்றால் கதாநாயகன், கதாநாயகி, கமெடி, ஆக்ஷன், பன்ச் வசனங்கள், அனல் பறக்கும் சண்டை காட்சிகள், ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கும் டூயட் பாடல்கள், ஒரு மோசமான வில்லன், தன்னை சுற்றி ஆண்கள் நிற்க ஒரு பெண் கவர்ச்சியாக நடனமாடுவது என எல்லாம் இருக்கும்.
95 சதவீத நடிகர்கள் இது போன்ற படங்களில் நடிக்கவே ஆசைப்படுவார்கள். ஏனெனில் இது ஹிட் அடிக்கும் ஃபார்முலா என்பது அவர்களின் கணக்கு. சினிமா துவங்கியது முதல் இப்போது வரை இது நிரூபிக்கப்பட்டும் வருகிறது. இன்னொன்று இப்படிப்பட்ட கதைகளில் நடித்தால்தான் ரசிகர்களிடம் நாம் போய் சேருவோம் என்று நடிகர்கள் நம்புகிறார்கள்.
ரஜினி, விஜய், அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு, கார்த்தி, விஷால் உள்ளிட்ட எல்லோரும் இது போன்ற படங்களில்தான் நடிக்கிறார்கள். இதுபோன்ற படங்களைத்தான் தயாரிப்பாளர்களும் தயாரிக்க ஆசைப்படுவார்கள். ஏனெனில், அவர்களை பொறுத்தவரை சினிமா என்பது இவ்வளவு காசு போட்டு இவ்வளவு காசு எடுக்கும் ஒரு வியாபாரம்தான்.
இது மெஜாரிட்டியாக இருந்தாலும் ராம், பா.ரஞ்சித், பாலா, மாரி செல்வராஜ் போன்றவர்கள் நல்ல கதையம்சம் கொண்ட கலை படங்களை உருவாக்கி வருகிறார்கள். அவர்கள் முடிந்தவரை இந்த மசாலா படங்களை தவிர்க்கிறார்கள். இதில் புதிதாக வந்தவர் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை போன்ற படங்களை இயக்கியவர். மாற்று சினிமாவுக்கு ஆசைப்படுபவர் இவர். சினிமா என்பது மக்களின் பிரச்சனையை, வாழ்வியலை பேச வேண்டும் என்பது இவரின் ஆசை.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய மாரி செல்வராஜ் ‘50 ஆண்களுக்கு நடுவே ஒரு பெண்ணை ஆட வைக்கும் சினிமாவை நீங்கள் தொடர்ந்து ஆதரித்து வருகிறீர்கள். நான் யாரிடம் சென்று சொல்வது?.. 50 வருடங்களுக்கு முன்பே ஒரு பெண் இபடி ஆடும்போது அதை ஏன் யாரும் தடுக்கவில்லை?. ஒரு ஆணும் பெண்ணும் ஆடினால் அது காதல். அல்லது ஆண்களும், பெண்களும் சேர்ந்து ஆடினால் அது கொண்டாட்டம். சுற்றி பல ஆண்கள் இருக்க ஒரு பெண் ஆடுவதை எப்படி புரிந்துகொள்வது?’ என கேள்வி எழுப்பியிருக்கிறார்.
சினிமா உலகில் இதை ‘ஐட்டம் சாங்’ என சொல்வார்கள். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள கூலி படத்தில் இடம் பெற்றுள்ள மோனிகா பாடலுக்கு பூஜா ஹெக்டே இப்படித்தான் நடனாமாடியிருக்கிறார் என்பது குறிபிடத்தக்கது.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…