இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள பறந்து போ படம் வரும் ஜூலை 4ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் அப்படத்தின் ப்ரோமோஷனுக்காக பல பேட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் ராம் தனது உதவி இயக்குனரான மாரி செல்வராஜை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார்.
ஜியோ ஹாட்ஸ்டார் தயாரிப்பில் ராம் இயக்கியுள்ள பறந்து போ படத்தில் மிர்ச்சி சிவா, அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்க்கீஸ், விஜய் யேசுதாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வை உணர்த்தும் இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார்.
இயக்குனர் ராம் பிரபல இயக்குனர்களான பாலு மகேந்திரா, தங்கர் பச்சான், இந்தி இயக்குனர்களான ராஜ்குமார் சந்தோஷி மற்றும் கோவிந்த் நிஹிலானி ஆகியோரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியுள்ளார். கற்றது தமிழ் படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். அதை தொடர்ந்து தங்க மீன்கள், தரமணி, பேரன்பு போன்ற தரமான படங்களை இயக்கியிருந்தார். அப்பா மற்றும் மகளின் பாசத்தை வெளிபடுத்தியிருந்த ராம் தற்போது பறந்து போ படத்தில் அப்பா மற்றும் மகனின் உறவை மையமாக கொண்டு எடுத்துள்ளார்.
மாரி செல்வராஜ் மற்றும் எஸ்.யு. அருண் குமார் போன்ற இளம் இயக்குனர்கள் ராமின் உதவி இயக்குனர்களாக பணிபுரிந்தவர்கள். மேலும், என்னுடைய உதவி இயக்குனர்கள் வளர்ந்து வந்து முன்னணி நடிகர்களுடன் படம் இயக்குவது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. அதுவும் மாரி செல்வராஜ் படங்களை புகழ்ந்து பேசினால் எனக்கு மிக சந்தோஷமாக இருக்கும், அதுவும் என்னுடைய வெற்றி தான். ஆனால் அந்த வெற்றி போதுமானது அல்ல, இன்னும் அவரிடம் அதிகமான திறமை உள்ளது.
இன்னும் சில நாட்களில் அவர் ஷாருக்கான் மற்றும் சல்மான் கானுடம் படம் பண்ணி ஒரு பான் இந்திய இயக்குனராக மாறுவார். அப்போது நான் அங்கே சென்று அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது என்னுடைய ஆசை. மேலும், நான் ஷாருக்கானின் மிகப் பெரிய ஃபேன் என பேசியுள்ளார் இயக்குனர் ராம்.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…