Categories: Cinema News latest news

பைசன் காளமாடன்ல துருவ் விக்ரமின் உழைப்பு எப்படி? பிரமித்துச் சொல்லும் மாரி செல்வராஜ்!

தீபாவளி ரேஸில் இப்போது இருந்தே அதிக எதிர்பார்ப்பைக் கொண்டு வந்துள்ளது மாரி செல்வராஜின் பைசன் காளமாடன். படத்தின் டிரெய்லர் கூடுதல் எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் கொண்டு வந்துள்ளது. இந்தப் படத்திற்கு அப்படி என்ன ஸ்பெஷல். இது மணத்தி கிட்டான் என்ற ஒரு கபடி வீரரின் வாழ்;க்கை வரலாறு. இவர் தென்தமிழகத்தில் கபடி விளையாட்டில் அசாத்திய சாதனைகளைப் படைத்தவர். அதைத் தத்ரூபமாகக் கொண்டு வந்துள்ளார் மாரி செல்வராஜ். 

பைசன் காளமாடன் ஸ்கிரிப்டை பண்ணனும்னு முடிவு பண்ணின உடனே யாரை வச்சிப் பண்றதுங்கறது மிகப்பெரிய கேள்வியாக இருந்தது. இந்தப் படத்தைப் பண்றது சாதாரண விஷயம் கிடையாது. இதற்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மிகப்பெரிய உழைப்பைப் போட வேண்டிய ஹீரோ தேவையா இருந்தது. இன்னொரு உலகத்துக்கு என்னோட உணர்ச்சிக்கு எங்கூட ஈடு கொடுத்து ஓடிவரக்கூடிய இறங்கி வேலை செய்யக்கூடிய ஹீரோ இருந்தா தான் படத்தைப் பண்ண முடியும். இல்லன்னா பண்ண முடியாது. அப்படிங்கற நிலைமை இருந்தது. அந்த நேரத்துல  எனக்கு ஒரே சாய்ஸா இருந்தது துருவ் விக்ரம்தான்.

மணத்தி கிட்டான்னதும் எனக்கு முதல்ல மனசுல தோன்றியது துருவ் தான். நான் சின்ன வயசுல இருந்து பார்த்த கிட்டானை அப்படியே தத்ரூபமாகக் கொண்டு வர துருவ் விக்ரமின் உழைப்பு சாத்தியமாக இருந்தது. சினிமாவுக்காக ஒரு கலைஞன் இவ்வளவு மெச்சூர்டான உழைப்பைப் போட முடியுமான்னு பிரமிக்க வைச்சாரு. துருவோட உழைப்புக்கு பைசன் காளமாடன் மிகப்பெரிய அங்கீகாரமா இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Published by
ராம் சுதன்