மாரிசெல்வராஜ் கொடுத்த பில்டப்! நைசா கழண்ட தனுஷ்.. இது கொஞ்சம் அதிகம்தான்

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:34:37  )

தனுஷ் அவருடைய பாதையை சரியாக அமைத்துக் கொண்டு அடுத்தடுத்த வளர்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டு இருக்கிறார். சமீபகாலமாக கன்டென்ட் சம்பந்தமான கதைகளை தேர்ந்தெடுத்து அதை கமெர்ஷியலாகவும் ஆக்கி மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறார் தனுஷ்.

அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ராயன் திரைப்படம் ஒரு சமூக கருத்தை உள்ளடக்கிய திரைப்படமாகவும் அதே வேளையில் ஒரு கமர்சியலான படமாகவும் அமைந்திருந்தது. அந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரும் வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தை தனுசே இயக்கி அதில் நடிக்கவும் செய்திருந்தார்.

இதற்கிடையில் அவருடைய லைன் அப்பில் ஏகப்பட்ட படங்கள் இருந்தாலும் மீண்டும் மாரி செல்வராஜுடன் ஒரு படத்தில் இணைய இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி ஆனால் அந்த படம் டிராப்பானதாகவும் சொல்லப்பட்டது. ஏற்கனவே மாரி செல்வராஜுடன் இணைந்து கர்ணன் திரைப்படத்தில் நடித்திருந்தார் தனுஷ்.

அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனால் மீண்டும் அவர்கள் கூட்டணியில் ஒரு படம் வரவிருக்கிறது என்ற செய்தியை கேட்டதும் ரசிகர்கள் ஒருவித எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் அந்த படம் டிராப்பானதாக சொல்லப்பட்டது .அதற்கான காரணம் என்ன என்பதுதான் இப்போது சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றன.

மாரி செல்வராஜ் அந்த படத்தை 140 கோடி பட்ஜெட்டில் எடுப்பதாக இருந்தாராம். அதில் 50 கோடி தனுஷுக்கு சம்பளம். 70 கோடி படத்திற்கான மேக்கிங் செலவு என பெரிய அளவில் எடுப்பதாக இருந்தாராம். இதைக் கேட்டதும் தனுஷுக்கு கொஞ்சம் தயக்கம் இருந்ததாக சொல்லப்படுகிறது.

அதனால் நைசாக அந்த படத்தில் இருந்து தனுஷ் விலகிக் கொண்டார் என்ற ஒரு செய்தியும் இருக்கிறது. இதனால் இந்த கதை அப்படியே பிரின்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கார்த்தி நடிப்பதாக இப்போது சொல்லப்படுகிறது. இதே கதையில் கார்த்தி நடிக்கிறார் என்றால் இவ்வளவு பட்ஜெட் செலவாகாது. ஏனெனில் தனுஷுக்கு 50 கோடி சம்பளம் எனில் கார்த்தி 15 கோடி தான் வாங்குவார். மீதி 35 கோடி லாபம் தான். அதனால் பட்ஜெட் அங்கு பெரிய பிரச்சினையாக இருக்காது என கோடம்பாக்கத்தில் கூறி வருகிறார்கள்.

Next Story