மார்க் ஆண்டனி பட பிரபலத்துக்கு ஒரு கோடி நஷ்டப்படுத்திய பிரகாஷ்ராஜ்… சொல்லாமல் கொள்ளாமல் ஓடிய பின்னணி…

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:39:03  )

Mark Antony: விஷால் நடிப்பில் கடந்தாண்டு வெளியான மார்க் ஆண்டனி திரைப்படத்தில் தனக்கு மிகப்பெரிய அளவில் நஷ்டத்தை ஏற்படுத்திய வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ் குறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் போட்டிருக்கும் பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மார்க் ஆண்டனி. இப்படத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, சுனில், ரித்து வர்மா, நிழல்கள் ரவி, அபிநயா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைப்பு செய்திருந்தார்.

மேலும் இப்படத்தினை மினி ஸ்டுடியோ சார்பில் வினோத்குமார் தயாரித்து இருந்தார். இப்படம் கடந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்புக்களை பெற்றது. வசூலிலும் சாதனை படைத்தது. இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் வினோத் குமார் போட்டிருக்கும் பதிவு ஒன்று இணையத்தில் வெளியாகி வருகிறது.

பிரகாஷ்ராஜின் எக்ஸ் பதிவை மேற்கோள்காட்டி வினோத் வெளியிட்டிருக்கும் அப்பதிவில், உங்களுடன் இருப்பவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றனர். ஆனால் நீங்கள் தோல்வி அடைந்தவர். என்னுடைய ஷூட்டிங் ஸ்பாட்டில் யாரிடமும் சொல்லாமல் கேரவனிலிருந்து ஓடி விட்டீர்கள். அதனால் எனக்கு ஒரு கோடி வரை நஷ்டமானது என அவர் குறிப்பிட்டிருந்தார்.

அடுத்த பதிவில், செப்டம்பர் 30, 2024 அன்று இது நடந்தது. ஒட்டுமொத்த நடிகர்களும், படக்குழுவினரும் அதிர்ச்சியடைந்தனர். கிட்டத்தட்ட 1000 ஜூனியர் ஆர்டிஸ்ட் இடம்பெற்ற ஷூட்டிங் அது. அவருக்கு 4 நாள் ஷெட்யூல். வேறு சில தயாரிப்பில் இருந்து அழைப்பு வந்ததால் கேரவனிலிருந்து வெளியேறினார்.

என்ன செய்வதென்று தெரியவில்லை. நாங்கள் ஷூட்டிங்கையே நிறுத்த வேண்டியிருந்தது. அதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிவித்திருக்கிறார். ஆனால் அப்படம் குறித்து என்ற தகவலும் பதிவில் குறிப்பிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story