எல்சியூ ஷார்ட் பிலிமுக்கு இதான் டைட்டிலா? களமிறக்கப்படும் மாஸ் ஹீரோ… அடிதூள்!..
LCU: தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் அடுத்த கட்டமாக் ஷார்ட் பிலிம் ஒன்று வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் படக்குழு குறித்த ஆச்சரிய தகவல்கள் இணையத்தில் கசிந்து இருக்கிறது.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அடி எடுத்து வைத்தவர் தொடர்ச்சியாக ஹிட் படங்களை மட்டுமே கொடுத்து வருகிறார்.தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களான கமல்ஹாசன், விஜயை தொடர்ந்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையும் இயக்கி வருகிறார்.
பெரும்பாலான லோகேஷின் திரைப்படங்கள் கொள்ளை மற்றும் கடத்தலை சம்பந்தப்பட்ட கதையாக அமைந்திருக்கிறது. இது குறித்து அவரிடம் சமீபத்தில் கேட்ட கேள்விக்கு கூட அடுத்த ஐந்து வருடத்திற்கு என்னால் இந்த கதைகள் இருந்து வெளிவர முடியாது எனக் கூறியிருந்தார்.
அது மட்டும் அல்லாமல் ஒரு படத்தை இன்னொரு படத்துடன் தொடர்புபடுத்தும் காட்சிகளை அமைக்கும் ஹாலிவுட் திரைப்படங்கள் போல் லோகேஷும் தன்னுடைய படங்களில் கையாண்டு வருகிறார். அத்தகைய படங்களுக்கு லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் என அடையாளம் கொடுக்கப்படுகிறது.
கார்த்தி நடிப்பில் வெளியான கைதி, கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம், விஜய் நடிப்பில் வெளியான லியோ உள்ளிட்ட திரைப்படங்கள் எல்சியூக்கு கீழ் தான் வந்தது. இத்தகைய படங்கள் மீது ரசிகர்களும் ஆர்வமாக தான் இருக்கின்றனர்.
தொடர்ந்து எஸ்யூ திரைப்படங்கள் வரும் என லோகேஷ் தரப்பு தெரிவித்து இருக்கிறது. அந்த வகையில் முதற்கட்டமாக எல்சி யூ வின் ஆரம்ப புள்ளியை குறிக்கும் விதமாக ஷார்ட் பிலிம் ஒன்று வெளியாக இருக்கிறது. பிள்ளையார் சுழி என பெயர் வைக்கப்பட்டிருக்கிறதாம்.
இதில் சூர்யா அல்லது விஜய் சேதுபதி உள்ளிட்ட இருவரில் ஒருவர் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருவருமே எல்சியூ படங்களில் வில்லனாக நடித்து ஹிட் அடித்து இருக்கின்றனர். இதனால் இந்த ஷார்ட் பிலிம் ஆன்டி ஹீரோ கதையாக தான் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.