‘மழை பிடிக்காத மனிதன்’ பஞ்சாயத்தில் கருப்பு ஆடே விஜய் ஆண்டனிதான்! என்ன ஒரு அயோக்கியத்தனம்?

by ராம் சுதன் |

சமீபத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான மழை பிடிக்காத மனிதன் படத்தில் முதல் ஒரு நிமிட காட்சிகளை தனக்கு தெரியாமலேயே யாரோ சேர்த்திருக்கிறார்கள் என படத்தின் இயக்குனரான விஜய் மில்டன் கூறியது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சில ஆண்டுகளாக கிடப்பிலேயே போடப்பட்ட திரைப்படம்தான் மழை பிடிக்காத மனிதன்.

இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி மற்றும் மேகா ஆகாஷ் லீடு ரோலில் நடித்திருந்தார்கள். மேலும் இந்தப் படத்தில்தான் விஜயகாந்தை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அந்த முயற்சி பயனளிக்கவில்லை. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்புதான் படம் வெளியானது. எதிர்பார்த்த அளவு படம் ரசிகர்களை ஈர்க்கவில்லை.

இதில் முதல் ஒரு நிமிட காட்சிகளை தனக்கு தெரியாமல் யாரோ சேர்த்திருக்கிறார்கள் என இயக்குனர் விஜய் மில்டன் புகார் அளித்திருக்கிறார். இதற்கு பின்னாடி ஒரு வேளை விஜய் ஆண்டனி இருக்கலாம் என வலைப்பேச்சு பிஸ்மி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். ஏனெனில் படத்தின் தலைப்பு வைக்கும் போதே இந்தப் படத்திற்கு சலீம் 2 என வைக்கலாம் என விஜய் ஆண்டனி கூறினாராம்.

ஆனால் விஜய் மில்டன் மழை பிடிக்காத மனிதன் என்ற பெயர்தான் வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார். இதிலிருந்தே இருவருக்கும் சில கருத்து வேறுபாடு இருந்ததாம். சில பல பஞ்சாயத்துக்கு பிறகு ஒரு வழியாக படத்தை எடுக்க ஆரம்பித்திருக்கின்றனர். இருந்தாலும் மழை பிடிக்காத மனிதன் படத்தை எப்படியாவது சலீம் படத்தோடு லிங்க் பண்ணியாக வேண்டும் என விஜய் ஆண்டனி தரப்பில் நினைத்துக் கொண்டிருந்தார்களாம்.

அதன் காரணமாகவே சலீம் படத்தின் ஒரு தொகுப்பை மழை பிடிக்காத மனிதன் படத்தில் சேர்த்து இவன் தான் அது என ஆரம்பத்திலேயே ரசிகர்களுக்கு காட்டியிருக்கிறார்கள். ஆனால் இது விஜய் மில்டனுக்கு தெரியவே தெரியாதாம். விஜய் மில்டனுக்கு படத்தை போட்டு காண்பிக்கும் போது அந்த முதல் ஒரு நிமிட சீன் இல்லாமல் காட்டி ரிலீஸ் நேரத்தில்தான் அந்த காட்சியை சேர்த்து ரிலீஸ் செய்திருக்கிறார்கள் என பிஸ்மி கூறினார்.

என்னதான் அவர்களுக்குள் பிரச்சினை இருந்தாலும் இயக்குனர் அனுமதியில்லாமல் இதை செய்தது முற்றிலும் தவறு என்றும் இது ஒரு அயோக்கியத்தனம் என்றும் பிஸ்மி கூறினார். மேலும் இது விஜய் ஆண்டனி தரப்பில் இருந்துதான் செய்திருக்கிறார்கள் என்றும் இதற்கு தயாரிப்பாளரும் உடந்தையாக இருந்திருப்பார் என்றும் பிஸ்மி கூறினார்.

மேலும் இந்தப் படத்தில் முதலில் விஜய் ஆண்டனி நடித்ததே பெரிய மைனஸ் என்றும் அவருக்கு பதில் அருண் விஜய் நடித்திருந்தால் அந்த கேரக்டருக்கு நன்றாக இருந்திருக்கும் என்றும் பிஸ்மி கூறினார்.

Next Story