விஜய் பட நடிகையை தட்டி தூக்கிய சிம்பு!.. இது வேறலெவல் காம்போ!...

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:33:57  )

Simbu: சிம்புவுக்கு ஒரு பழக்கம் உண்டு. மற்ற நடிகர்களை போல தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க மாட்டார். மிகவும் சின்சியராக வேலையை செய்யும் நபர் சிம்பு கிடையாது. எல்லாமே அவரின் மூடை பொறுத்து மாறும். படப்பிடிப்புக்கு போக விருப்பமில்லை எனில் போகமாட்டார். வீட்டில் தூங்கி கொண்டிருப்பார்.

படப்பிடிப்பு தளத்தில் அவருக்காக பலரும் காத்துக்கொண்டிருப்பார்கள். அதை பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டார். படப்பிடிப்புக்கு தாமதமாக போவார். கேட்டால் 'நடித்து நடித்து போரடித்துவிட்டது' என்பார். திடீரென ஒரு ஹிட் படம் கொடுப்பார். அதன்பின் காணாமல் போய்விடுவார். 2 வருடங்கள் கழித்து மீண்டும் வந்து ஒரு படத்தில் நடிப்பார்.

உணவு கட்டுப்பாடு இல்லாமல் வெயிட் போடுவார். அதன்பின் வெளிநாட்டுக்கு போய் கடுமையாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்து போட்டோ எடுத்து அதை டிவிட்டரில் போடுவார். அவருக்கென ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது. அவருக்கு பின்னால் சினிமாவில் நடிக்க வந்த தனுஷ், சிவகார்த்திகேயன் எல்லாம் எங்கோ போய்விட சிம்பு இன்னமும் அப்படியே இருக்கிறார்.

சினிமா உலகில் சிம்பு மாதிரி தயாரிப்பாளர்களுக்கு குடைச்சல் கொடுக்கும் ஒரு நடிகரை பார்க்கவே முடியாது. இவரை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை எடுத்த தயாரிப்பாளர் சிம்பு செய்த வேலையில் 10 கோடிக்கும் மேல் நஷ்டமாகி இப்போது வரை சிம்புவிடமிருந்து சில கோடிகளையாவது வாங்க தயாரிப்பாளர் சங்கத்திற்கு நடந்து வருகிறார்.

மாநாடு ஹிட் கொடுத்த சிம்பு அதன்பின் வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களில் நடித்தார். அதன்பின் ஒரு வருடத்திற்கும் மேல் சினிமாவில் நடிக்கவில்லை. ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க நந்தா பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு பின்னர் நின்று போனது.

இப்போது 'ஓ மை கடவுளே' பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். சமீபத்தில் இதன் அறிவிப்பு வெளியானது. இந்த படம் ஏற்கனவே தான் நடித்த தம், மன்மதன், வல்லவன், விண்ணை தாண்டி வருவாயா ஆகிய படங்களின் கலவையாக இருக்கும் என சிம்பு கூறியிருந்தார். இந்நிலையில், இந்த படத்தில் நடிக்க கோட் படத்தில் சின்ன விஜய்க்கு ஜோடியாக நடித்த மீனாக்‌ஷி சேஷாத்ரியிடம் பேசி வருகிறார்களாம்.

Next Story