Categories: Cinema News latest news

ரஜினியுடன் இணையும் சல்மான்… சும்மா அதிரப் போகுது…இந்த அப்டேட் புதுசு!..

Rajinikanth: முதல்முறையாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் சல்மான்கான் நடிக்க இருக்கிறார். அதிலும் படத்தின் இயக்குனர் குறித்த அப்டேட் வேறு ரசிகர்களுக்கு தற்போது ஆச்சரியத்தினை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழ் சினிமாவில் ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் அட்லீ. முதல் படமே மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தாலும் அவரை பழைய படங்களை காப்பி அடிக்கும் ஆள் எனக் கலாய்க்கப்பட்டார். தொடர்ந்து அவர் மூன்று படங்களை தளபதி விஜயை வைத்து இயக்கினார்.

மூன்று படங்களுமே மிகப்பெரிய வெற்றி பெற்றது. தெறி, மெர்சல், பிகில் என ஹிட் வரிசையில் வசூலும் குவிந்தது. இருந்தும் அட்லீ மீதான அந்த காப்பி கேட் விமர்சனம் மட்டும் குறையவே இல்லை. அந்த வகையில் அட்லீ தமிழ் ரசிகர்களால் அதிக விமர்சனத்துக்கு உள்ளாகினார்.

இவர் இயக்கத்தில் தமிழில் இதுவரை தோல்வி படங்களே இல்லாத நிலை இருக்கும் நிலையில் பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து இயக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஜவான் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

இங்கும் அவர் மீதான விமர்சனம் எழுந்தாலும் இந்தி ரசிகர்கள் அட்லீயை கொண்டாடி தீர்த்தனர். அதில் கிடைத்த லாபத்தை வைத்து சமீபத்தில் பேபி ஜான் படத்தினை தயாரித்தார். ஆனால் அப்படமும் பெரிய அளவில் அட்லீக்கு இடியாக இறங்கியது. தயாரிப்பெல்லாம் செட்டாகாது. இயக்கத்துக்கே சென்று விட முடிவெடுத்து இருக்கிறார்.

அதிலும் இந்த முறை ஷாருக்கான் மற்றும் ரஜினிகாந்தை இணைத்து இயக்க இருக்கிறாராம். இப்படத்தில் முக்கிய நாயகியாக ராஷ்மிகா மந்தனா இணைய இருக்கிறார். இன்னொரு நாயகி குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. மே மாதத்தில் இந்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
ராம் சுதன்