More
Categories: Cinema News Flashback

சிவாஜி மாதிரி எம்.ஜி.ஆரும்.. எம்.ஜிஆரை போல சிவாஜியும் நடித்த படம்!.. ரிசல்ட் இதுதான்!…

Mgr Sivaji: சினிமாவை பொறுத்தவரை ஒவ்வொரு நடிகருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும். அதை மற்றவர் செய்தால் சரிவாரது. ரஜினியின் ஸ்டைலை அவர்தான் செய்ய வேண்டும். அதை கமல் செய்தால் சரியாக இருக்கது. விஜயகாந்தை போல ராமராஜன் சண்டை போட்டால் ரசிகர்கள் சிரிப்பார்கள்.

எதை யார் செய்ய வேண்டும் என்பது முக்கியம். அதனால்தான் பெரும்பாலான நடிகர்கள் தங்களுக்கு எது செட் ஆகுமோ அதை மட்டும் செய்வார்கள். நடிகர் விஜய் இதுவரை 68 படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், சிறந்த கதை, நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரம், வித்தியமான தோற்றம் என் ஒரு படத்தில் கூட அவர் நடித்தது இல்லை.

Advertising
Advertising

இது நமக்கு செட் ஆகாது என்பதில் அவர் தெளிவாக இருந்தார். விக்ரம் செய்த பிதாமகன், காசி போன்ற கதாபாத்திரங்களையோ, பிரித்திவிராஜ் ஆடுஜீவிதம் படத்தில் அவர் கொடுத்த நடிப்பையோ கண்டிப்பாக விஜய் செய்ய முடியாது. அவரின் ரசிகர்களுக்கும் அது பிடிக்காது.

60களில் தமிழ் சினிமாவில் முதல் இரண்டு இடங்களில் இருந்தவர்கள் எம்.ஜி.ஆரும், சிவாஜியும். எம்.ஜி.ஆர். கத்தி சண்டை, வாள் வீச்சி, அதிரடி சண்டை காட்சிகள், புரட்சிகரமான வசனங்கள் மற்றும் பாடல்கள் என்கிற ரூட்டில் போனார். சிவாஜியோ குடும்ப கதை, செண்டிமெண்ட் காட்சிகள், அழுகை காட்சிகள், பக்கம் பக்கமாக வசனம் என்கிற ரூட்டில் போனார்.

ஆனால், நடிகர்களை சுற்றி இருப்பவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். எதையாவது சொல்லி மனதை மாற்றி நடிகர்களை காலி செய்து விடுவார்கள். எம்.ஜி.ஆரிடம் சில வினியோகஸ்தர்கள் சென்று ‘சிவாஜி ஸ்டைலில் நீங்கள் ஒரு படம் நடிக்க வேண்டும்’ என சொன்னார்கள். ‘அப்படியா’ என யோசித்த எம்.ஜி.ஆர் ‘பரிசு’ என்கிற படத்தில் நடித்தார். படம் ஓடவில்லை.

சிவாஜியிடம் ‘நீங்கள் எம்.ஜி.ஆர் ஸ்டைலில் ஒரு படம் நடியுங்கள்’ என சொல்ல அவர் தங்கச்சுரங்கம் என்கிற படத்தில் நடித்தார். படம் தோல்வி அடைந்தது. அதன்பின் இருவரும் அந்த முயற்சியை செய்யவில்லை. தங்களின் ஸ்டைலில் மட்டுமே நடித்தார்கள். சிவாஜிக்கு ஆக்‌ஷன் கதை வந்தால் ‘இதை அண்ணன் செய்தால் மட்டுமே சரியாக இருக்கும்’ என சொல்லிவிடுவார்.

அதேபோல், செண்டிமெண்ட் காட்சி கொண்ட கதைகள் வந்தால் ‘இதை தம்பி கணேசன் செய்தால் சரியாக இருக்கும்’ என சொல்லிவிடுவார் எம்.ஜி.ஆர். இந்த புரிதல் கடைசி வரை இருவருக்கும் இருந்தது.

Published by
ராம் சுதன்

Recent Posts