அடேங்கப்பா பட்ஜெட்ட கேட்டாலே தலைசுத்துதே! மூக்குத்தி அம்மன் 2க்கு இவ்வளவு மவுசா?

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:38:11  )

ஏற்கனவே நயன்தாரா நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் படம் பெரிய அளவில் வெற்றி அடைந்ததை ஒட்டி அதன் இரண்டாம் பாகம் தயாராகிக் கொண்டிருக்கின்றது. மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தை சுந்தர் சி இயக்குகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஆர் ஜே பாலாஜி மற்றும் சரவணன் இணைந்து இயக்கிய மூக்குத்தி அம்மன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவு வெற்றி பெற்றது.

இந்த படம் வெளியாவதற்கு முன்பு வரை எத்தனையோ கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் அம்மனை பல விதங்களில் படங்களில் நாம் பார்த்திருப்போம். கோபக்கார அம்மனாக எதிரிகளை வேட்டையாடும் அம்மனாக பார்த்திருப்போம்.

ஆனால் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை பொறுத்த வரைக்கும் எந்த அளவுக்கு மக்கள் கடவுள் விஷயத்தில் மூடநம்பிக்கைகளோடு இருக்கிறார்கள் என்ற அடிப்படையில் ஒரு காமெடி கலந்த திரைப்படமாக இதை காட்டியிருப்பார் ஆர் ஜே பாலாஜி.

அதுவரை மிகவும் மாடர்னான தோற்றத்தில் நயன்தாராவை பார்த்திருந்த ரசிகர்களுக்கு இந்த படத்தின் மூலம் அம்மன் வேடத்தில் பார்க்கும் பொழுது பிரமிப்பாக இருந்தது. ஒரு மார்டன் அம்மன் என்றே சொல்லலாம். இந்த நிலையில் முதல் பாகம் வெற்றியடைந்ததை அடுத்து அதன் இரண்டாம் பாகமும் இப்போது தயாராகி வருகிறது.

இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இந்த இரண்டாம் பாகத்திலும் நயன்தாராவே நடிக்கிறார். மற்ற நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

ஆனால் சுந்தர் சி இந்த படத்தை இயக்குகிறார் என்பது மட்டும் உறுதியாகி இருக்கிறது. இந்த நிலையில் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் எவ்வளவு பட்ஜெட்டில் தயாராகி வருகிறது என்பது குறித்த செய்தி இப்போது வெளியாகியிருக்கிறது. கிட்டத்தட்ட 55 கோடி செலவில் இந்த படம் மிக பிரம்மாண்டமாக தயாராக போகிறதாம்.

ஏனெனில் அரண்மனை படத்தின் சீரிஸ் தொடர்ந்து வெற்றியடைந்ததை ஒட்டி சுந்தர் சி பர்ஸ்ட் காபி என்ற அடிப்படையிலேயே படத்தை எடுத்து வருகிறார். அதனால் இந்த படத்தையும் பர்ஸ்ட் காப்பி என்ற வகையில் தான் எடுக்கிறாராம் .அது மட்டுமல்ல நயன்தாரா சம்பளத்தை பார்க்கும் பொழுதும் இந்த அளவு பட்ஜெட் செலவாகும் என்று தெரிகிறது.

Next Story