எண்டுலதான் ஆட்டமே இருக்கு! ஹைப்பை ஏத்திக்கிட்டே போகும் ‘இந்தியன் 2’.. தாத்தாக்கு பின்னாடி இப்படி ஒரு விஷயமா?

by ராம் சுதன் |

கமல் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் இந்தியன் 2. இந்த படத்தில் கமலுடன் இணைந்து சித்தார்த், காஜல் அகர்வால், ஜெகன், பிரியா பவானி சங்கர், எஸ் ஜே சூர்யா,பாபி சிம்ஹா போன்ற பல பெரிய நட்சத்திர பட்டாளங்களே நடித்திருக்கின்றனர்.

ஏழு வருடங்களுக்குப் பிறகு பல போராட்டங்களை தாண்டி இந்த படம் வரும் 12ஆம் தேதி ரிலீசாக இருக்கின்றது. படத்தின் நீளம் கருதி இந்தியன் 2 , இந்தியன் 3 என இரண்டு பாகங்களாக படத்தை எடுத்திருக்கின்றனர். இந்தியன் 2 ரிலீசுக்கு பிறகு இந்தியன் 3 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி பின்னர் அறிவிப்பார்கள்.

இந்த நிலையில் பிரமோஷனுக்காக பல ஊர்களுக்கு செல்லும் கமல் ஒரு மேடையில் கூறும்போது இந்தியன் 3 படத்துக்காகவே தான் இந்தியன் 2 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் எனக்கூறி இருந்தார். அது மிகவும் சர்ச்சையாக மாறிப்போனது. ஆனால் அவர் சொன்னதின் பின்னணியில் இருக்கும் சுவாரஸ்ய தகவல் பற்றி சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வைரலாகி வருகின்றது.

அதாவது விக்ரம் படத்தில் எப்படி இடைவெளிக்குப் பிறகு கமல் படம் முழுக்க இருப்பாரோ அது மாதிரியே தான் இந்தியன் 2 படத்திலும் இன்டர்வெல் வரைக்கும் கமல் பற்றிய உரையாடல்கள் இருக்குமாம். இன்டெர்வலுக்கு பிறகு தான் அதாவது இரண்டாம் பாதிக்கு பிறகு தான் கமல் சம்பந்தப்பட்ட காட்சிகள் அதிகளவு இருக்கும் என சொல்லப்படுகிறது.

அது மட்டும் அல்லாமல் படத்தின் கிளைமேக்ஸ்சில் இந்தியன் 3 படத்தின் ஒரு ப்ரோமோ வீடியோவும் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது. இந்தியன் 3 திரைப்படத்தை பொருத்தவரைக்கும் சேனாபதியின் தந்தை யார் என்பது பற்றிய தகவல்கள் இருக்கும் என்றும் ஒரு செய்தி வெளியாகியிருக்கின்றது.

அதாவது இந்தியன் முதல் பாகத்தில் சேனாபதி ஏன் லஞ்சம் வாங்கியதற்காக தன் மகனையே கொன்றார் ?அப்படி என்றால் சேனாபதியின் குடும்பம் எப்படிப்பட்டது ?எந்த சூழலில் அவர் வளர்ந்தார் என்பதை கூட ஒரு படமாக எடுக்கலாம் என்ற ஒரு பேச்சு அப்போது அடிபட்டது .அதன் ஒரு பகுதி தான் இந்தியன் 3ஆக கூட இருக்கலாம் என்று சொல்கிறார்கள்.

Next Story