Categories: latest news

மதராஸி படத்தில் எஸ்கே கேரக்டர் இதுதான்!.. சூர்யாவின் அந்தப் படத்துக்கு டஃப் கொடுப்பாரு போலயே?..

Actor Sivakarthikeyan: தமிழில் டிவி நிகழ்ச்சிகள் மூலமாக தனது திரைப்படத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன். தொடர்ந்து படிப்படியாக முன்னேறி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்கின்ற இடத்தை பிடித்திருக்கின்றார். ஆரம்பத்தில் தொகுப்பாளராக இருந்து வந்த சிவகார்த்திகேயன் தொடர்ந்து ஹீரோவாக அறிமுகமாகி நல்ல திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து தற்போது மக்கள் மத்தியில் நீங்க இடத்தை பிடித்திருக்கின்றார்.

அமரன் திரைப்படம்: நடிகர் சிவகார்த்திகேயன் கடைசியாக நடித்த அமரன் திரைப்படம் இவரை தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக மாற்றி இருக்கின்றது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் கடந்த தீபாவளி பண்டிகைக்கு வெளியான திரைப்படம் அமரன். இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவுக்கு வரவேற்பை பெற்றது.

படம் வெளியாகி மக்களிடையே தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வந்த காரணத்தால் பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் வேட்டை நடத்தியது. படம் கிட்டத்தட்ட 360 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. சிவகார்த்திகேயனின் கெரியரிலேயே அதிகம் வசூல் செய்த திரைப்படங்களில் முதல் இடத்தை அமரன் திரைப்படம் பிடித்திருக்கின்றது.

சிவகார்த்திகேயன் லைன் அப்: அமரன் திரைப்படத்தை முடித்த கையோடு நடிகர் சிவகார்த்திகேயன் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே-23 திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினர் படத்தின் டைட்டில் டீசரை வெளியிட்டார்கள்.

அதன்படி இந்த படத்திற்கு மதராஸி என பெயர் வைக்கப்பட்டிருக்கின்றது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி என்கின்ற திரைப்படத்திலும் நடித்து வருகின்றார். இந்த இரண்டு திரைப்படங்களின் மீதும் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கின்றது. நிச்சயம் படம் மிகப் பெரிய வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மதராஸி திரைப்படம்: நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் மதராஸி திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன் சற்று வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுவதாக பலரும் கூறி வருகிறார்கள்.

இது குறித்து சினிமா விமர்சகர்கள் கூறியிருப்பதாவது ‘இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். அதாவது கஜினி திரைப்படத்தில் சூர்யா எப்படி அடிக்கடி தன் வாழ்வில் நடைபெறும் விஷயங்களை மறந்து விடுவாரோ அதேபோல சிவகார்த்திகேயனுக்கும் இந்த திரைப்படத்தில் அப்படி ஒரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், டீசரை பார்க்கும் போதே அதில் தெளிவாக தெரிவதாக கூறி வருகிறார்கள். மேலும் சிவகார்த்திகேயன் லுக் ஒரு இறுக்கமான கதாபாத்திரமாக அமைந்திருக்கின்றது என்று கூறி வருகிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ramya suresh

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

8 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

9 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

9 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

10 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

16 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

18 hours ago