எம்.எஸ்.வியை அசர வைத்த இமான் பாட்டு!… நேரில் கூப்பிட்டு இப்படி பாராட்டினாராம்!..

கடந்த 20 வருடங்களுக்கும் மேல் தமிழ் சினிமாவில் இசையமைத்து வருகிறார் இசையமைப்பாளர் டி.இமான். பல இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் படங்களுக்கு இவர் இசையமைத்திருக்கிறார். இவரின் பல பாடல்கள் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்திருக்கிறது. சிவகார்த்திகேயனுக்கு ஆஸ்தான இசையமைப்பாளராக இருந்தவர் இவர்தான்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மனம் கொத்திப் பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்களுக்கு இசையமைத்தவர் இமான்தான். ரஜினி நடித்து வெளியான அண்ணாத்த படத்திற்கும் இசையமைத்தார். இந்த படம் ரசிகர்களுக்கு பெரிதாக பிடிக்கவில்லை என்றாலும் பாடல்கள் பிடித்திருந்தது.

தமிழ் சினிமாவில் பல அற்புதமான மனதை மயக்கும் மெலடி பாடல்களை கொடுத்திருக்கிறார் இமான். குறிப்பாக இமானின் இசையில் ஸ்ரேயா கோஷல் பாடிய அனைத்து பாடல்களுமே தேன் சொட்டும் சூப்பர் மெலடிகள்தான். கயல், உடன் பிறப்பே, டெடி, மருது, தொடரி, கும்கி, ரெக்க, ரோமியோ ஜூலியட், ரம்மி, பாண்டிய நாடு உள்ளிட படங்களின் பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தது.

குறிப்பாக அஜித் – நயன்தாரா நடித்து வெளியான விஸ்வாசம் படத்தில் இவரின் பாடல்கள் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. குறிப்பாக மகளுக்காக தந்தை பாடும் ‘கண்ணான கண்ணே’ பாடல் மனதை வருடியது. இந்த பாடலுக்காக தேசிய விருதையும் வாங்கினார் டி. இமான்.

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய இமான் ‘சினிமாவுக்கு வருவதற்கு முன் சீரியல்களுக்கு பாடல்களை இசையமைத்து கொண்டிருந்தேன். அப்படி நான் இசையமைத்ததில் கோலங்கள் சீரியலும் ஒன்று. அந்த சீரியலின் டைட்டில் பாடலை எம்.எஸ்.விஸ்வநாதன் ஐயா கேட்டு ரசித்திருக்கிறார்.

அதோடு, யார் இசையமைத்தது? யார் பாடியது? என்கிற விபரங்களை கேட்டு தெரிந்து கொண்டார். ஒரு மியூசிக் யூனியன் நிகழ்ச்சிக்காக சென்றிருந்தபோது என்னை அழைத்து ’நீதான கோலங்கள் சீரியலுக்கு மியூசிக் பண்ண.. தினமும் அதை கேட்பேன்டா’ என சொன்னார். எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது’ என சொல்லி இருக்கிறார்.

ராம் சுதன்

Recent Posts

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

2 hours ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

3 hours ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

5 hours ago

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

8 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

20 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

21 hours ago